ஏப்ரல் 1, 2 தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை : ரிசர்வ் வங்கி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 26, 2018, 07:25 [IST] நிதியாண்டு ஆண்டு இறுதி வங்கிக் கணக்கும் முடிக்கும் நாளாக ஏப்ரல் 1ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு அது ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. அன்றைய தினம் கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு இறுதி வங்கிக் கணக்குகள் முடிக்கும் நாளாக ஏப்ரல் 2ம் தேதி இருக்குமென பாரத ரிசர்வ் வங்கி முடிவு செய்து அறிவித்துள்ளது. வரும் வியாழக்கிழமை மார்ச் 29 அன்று மஹாவீரர் ஜெயந்தியும், வெள்ளிக்கிழமை மார்ச் 30 அன்று புனித வெள்ளியும் வருவதால் அவ்விரு நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். ஆனால் அடுத்து வரும் சனிக்கிழமை 31-03-2018 மாதத்தின் 5வது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் முழு நேரமும் செயல்படும்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|