பந்து சேதம்: ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் பதவி விலகினர் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 25, 2018, 22:00 [IST] தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில், இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்று சமநிலை வகிக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 311 ரன்கள், ஆஸ்திரேலிய அணி 255 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட்டுக்கு 238 ரன்கள் எடுத்து வலுவான முன்னிலை பெற்றிருந்தது. 3-வது நாள் ஆட்டத்தின்போது ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் பான்கிராப்ட் ஒருவகை பொருளைக் கொண்டு பந்தை சேதப்படுத்தியது கேமரா மூலம் தெரியவந்தது. பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியதை கேப்டன் ஸ்மித் ஒத்துக் கொண்டார். ஆஸ்திரேலிய அரசு ஸ்மித்தை கேப்டன் பதவில் இருந்து நீக்க பரிந்துரை செய்தது. இந்நிலையில் கேப்டன் ஸ்மித், துணைக் கேப்டன் வார்னர் ஆகியோர் கேப்டன் பதவியில் இருந்த விலக ஒப்புக் கொண்டனர். இதனால் கிரிக்கெட் வாரியம் அவர்களை உடனடியாக கேப்டன் பதவிகளில் இருந்து நீக்கியது. ஸ்மித்திற்குப் பதிலாக விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஐபிஎல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
வஸந்த்! வஸந்த்! மொழி: தமிழ் பதிப்பு: 5 ஆண்டு: செப்டம்பர் 2013 பக்கங்கள்: 176 எடை: 200 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-81-88641-47-2 இருப்பு இல்லை விலை: ரூ. 145.00 தள்ளுபடி விலை: ரூ. 130.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: சுஜாதாவின் கணேஷ்-வஸந்த் தொடர்களில் வாசகர்களைப் பெரிதும் ஈர்த்த நாவல் வஸந்த்! வஸந்த்! ஒரு பழங்காலக் கிணறு குறித்த ஆராய்ச்சிக் குறிப்பும் அதன் பின்னணியில் நிகழும் குற்றங்களும் மிகவும் விறுவிறுப்பாகச் சித்தரிக்கப்படும் இந்நாவல் வாசகர்களின் யூகங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் வேறு திசைக்குத் திருப்பிவிட்டு எதிர்பாராத திருப்பங்களை உருவாக்குகிறது. சுஜாதாவின் அங்கதம் அதன் உச்சத்தைத் தொட்ட படைப்புகளில் இதுவும் ஒன்று. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|