தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவுக்கு எதிராக போராட்டம் தீவிரம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 25, 2018, 17:15 [IST] தூத்துக்குடி - மதுரை பைபாஸ் ரோட்டில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அமைந்து உள்ளது. இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. நேற்று வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். பெரும்பாலான கடைகள், தியேட்டர்கள் மூடப்பட்டன. நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வாகனங்கள் ஓடவில்லை. சிதம்பர நகர் பேருந்து நிலையம் அருகே ஆலைக்கு எதிராக திரளான பொதுமக்கள் கூடி போராட்டம் நடத்தினர். தூத்துக்குடியில் நடைபெற்று வரும் போராட்டத்தில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று உள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் சார்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கந்தக டை ஆக்சைடால் சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதால் அந்த ஆலையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் ராமதாஸ். இதனிடையே ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு அழைத்தால் வருவேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி லண்டனில் அதன் உரிமையாளர் அனில் அகர்வால் வீட்டு முன்பாக தமிழர்கள் போராட்டம் நடத்தினர். லண்டனில் நடைபெற்ற போராட்டத்தில் குழந்தைகளும் கலந்து கொண்டனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|