7 ஆண்டுக்குப் பிறகு சேலம் - சென்னை இடையே விமான சேவை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 25, 2018, 12:50 [IST] சென்னையில் இருந்து சேலம் வந்த விமானத்துக்கு தண்ணீர் பீச்சியடித்து வரவேற்கப்பட்டது. பயணிகளுக்கு டிக்கெட் வழங்கி விமான சேவையை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் நடுத்தர நகரங்களுக்கு படிப்படியாக விமான சேவை தொடங்கப்படும் என சென்னையில் இருந்து சேலத்துக்கு விமானத்தில் வந்த முதலவர் பேட்டி அளித்தார். 1993-ம் ஆண்டு திறக்கப்பட்ட சேலம் விமான நிலையம், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் அதன்பின்னர் 2010ம் ஆண்டில் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் சேலத்தில் மீண்டும் இன்று முதல் விமான சேவை தொடங்கப்பட இருக்கிறது. சிறு விமான நிலையங்களுக்கு உயிரூட்டும் வகையில் உதான் திட்டம் மூலம் நகரங்களில் இணைக்கும் வகையில் ஹைதராபாத், சென்னை, சேலத்திற்கு இன்று முதல் விமானசேவை துவங்கியது. சென்னையில் காலை 9.50 மணிக்கு புறப்படும் விமானம் சேலத்திற்கு காலை 10.40 மணிக்கு வந்தடையும். சேலத்தில் காலை 11 மணிக்கு புறப்படும் விமானம் சென்னைக்கு காலை 11.50 மணிக்கு வந்தடையும். 72 பயணிகளில் முதல் 30 பேருக்கு மட்டுமே ரூ. 1,499 கட்டணம் எனவும் எஞ்சியுள்ள பயணிகளுக்கு ரூ.2,300 முதல் 2,700 வரை கட்டணம் எனத் தெரிகிறது. இந்த விமான சேவை மீண்டும் துவங்கப்பட்டதையடுத்து சேலம் விமான நிலையத்தில் 24 மணிநேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
|
கூண்டுக்கு வெளியே மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜூலை 2016 பக்கங்கள்: 183 எடை: 250 கிராம் வகைப்பாடு : சூழலியல் ISBN: 978-81-92460-99-1 இருப்பு உள்ளது விலை: ரூ. 160.00 தள்ளுபடி விலை: ரூ. 145.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தன் பணிக்காலத்தில் மனிதர்களை விட வனவிலங்கு களுடன் அதிக நேரம் செலவிட்டவர் டாக்டர் ந.பன்னீர்செல்வம். வண்டலூர் உயிரியல் பூங்கா, அதன் பின்னர் டெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்கா ஆகியவற்றில் வனவிலங்கு மருத்துவராக கால்நூற்றாண்டு அளவுக்குப் பணியாற்றிய இவர், வனவிலங்குகளின் மருத்துவத்தில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர். கால்நடை மருத்துவத்தில் முதுகலைப் பட்டதாரியான பன்னீர்செல்வம், மதுரையைச் சேர்ந்தவர். இந்நூலில் உயிரியல் பூங்காக்களில் வனவிலங்குகள் மருத்துவம், பராமரிப்பு தொடர்பாக தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களை எளிமையான மொழியில் பகிர்ந்துகொள்கிறார். இந்நூல் வனவிலங்குப் பூங்காக்களில் அடைபட்டிருக்கும், விலங்குகள் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|