பல்சுவை இணைய இதழ்
  


கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சென்ற கார் விபத்து: தலையில் காயம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 25, 2018, 12:30 [IST]

புதுதில்லி: கிரிக்கெட் வீரர் முகமது ஷமி சென்ற கார் டெல்லி அருகே விபத்துக்குள்ளானதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

டேராடூன் நகரில் இருந்து டெல்லிக்கு முகமது ஷமி இன்று காரில் சென்ற போது, ஷமியின் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முகமது ஷமிக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்கு தலையில் சிறிய அளவில் தையல்கள் போடப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தலையில் மட்டுமே லேசான காயம் ஏற்பட்டு இருப்பதால் வேறு எந்த பாதிப்பும் இல்லை என்று சிகிச்சை அளித்த டாக்டர்கள் கூறியுள்ளனர். பின்னர் அங்கிருந்து வேறு ஒருகார் மூலம் மீண்டும டேராடூன் நகருக்கு திரும்பினார்.

முகமது ஷமிக்கு கடந்த ஒரு மாதமாகவே பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வந்து கொண்டே இருந்தது. பாகிஸ்தான் நாட்டுப் பெண்ணுடன் தவறான தொடர்பு வைத்துள்ளார், தன்னைக் கொலை செய்ய முயற்சித்தார் என்று அவரின் மனைவி ஜகான் புகார் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானிய பெண் அலிஷ்பா என்பவர் மூலம், முகமது பாய் என்பவரை துபாயில் சந்தித்து மேட்ச் பிக்சிங் செய்ய முகமது ஷமி பணம் பெற்றார் என்றும் அவரின் மனைவி ஜகான் தெரிவித்தார்.

முகமது ஷமியிடம் பிசிசிஐ அமைப்பின் ஊழல் ஒழிப்பு விசாரணை நடத்தி முடிவில் முகமது ஷமி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை எனத் தெரியவந்தது. இதையடுத்து, முகமது ஷிமிக்கு நிறுத்திவைக்கப்பட்டு இருந்த ஊதிய ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தது, அவர் பி பிரிவில் ஆண்டுக்கு ரூ.3 கோடி ஊதியத்தில் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டார். மேலும், ஐபில் போட்டியில் கொல்கத்தா அணிக்கு விளையாட உள்ளார்.

பிற செய்திகள்










கடல்புரத்தில்
ஆசிரியர்: வண்ணநிலவன்
வகைப்பாடு : புதினம் (நாவல்)
விலை: ரூ. 120.00
தள்ளுபடி விலை: ரூ. 110.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



ஒன்றில் ஒன்று
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

நந்தவனம்
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

சீனாவில் இன்ப உலா
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

ஊசியும் நூலும்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

நந்தவனம்
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)