பேரறிவாளன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் திடீர் அனுமதி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 24, 2018, 17:10 [IST] முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பேரறிவாளன். கடந்த சில மாதங்களாக சிறுநீரகத் தொற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பேரறிவாளனுக்கு, சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என பரிந்துரைத்தனர். இதனால் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற வசதியாக தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டுமென பேரறிவாளன் மனு அளித்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட ஏடிஜிபி அலுவலகம், கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி புதன்கிழமை சென்னை புழல் சிறைக்கு அவரை மாற்றம் செய்தது. அங்கு அவருக்கு சிறுநீரக தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு மீண்டும் சிறுநீரகத் தொற்று அதிகமானதை அடுத்து இன்று (24-03-2018) சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|