சென்னையில் லஞ்சம் வாங்கிய பொது கணக்காளா் கைது கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 24, 2018, 06:30 [IST] சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது கணக்கா் அலுவலகத்தில் நேற்று காலை 10 மணி முதல் சி.பி.ஐ. அதிகாாிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்ற புகாாில் பொது கணக்காளா் அருண் கோயல் மற்றும் மூத்த கணக்கு அலுவலா் கஜேந்திரன் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா். திருவண்ணாமலையைச் சேர்ந்த உதவி கணக்காளர் சிவலிங்கம், திருவள்ளூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக அதிகாரி ராஜா ஆகியோரையும் கைது செய்து சிபிஐ விசாரணை செய்து வருகிறது. சிபிஐ சோதனைக்கு ஆதரவாகவும், அருண் கோயலுக்கு எதிராகவும் ஊழியர் சங்கத்தினர் கணக்காளர் அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|