நாதெள்ளா நகைக்கடை மீது ரூ.250 கோடி மோசடி புகார் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 24, 2018, 06:05 [IST] சென்னையைச் சேர்ந்த நாதெள்ளா நகைக்கடை நிறுவனம் 2010 ஆம் ஆண்டு முதல் ரூ 250 கோடி வரை கடனாக பெற்று மோசடி செய்ததாக பாரத ஸ்டேட் வங்கி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி சிபிஐயிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளது. முன்னதாக கனிஷ்க் என்ற நகைக்கடை நிறுவனம் ரூ.824 கோடி மோசடி புகாரில் சிக்கி உள்ள நிலையில் சென்னையில் மேலும் ஒரு நகை கடை வங்கி மோசடியில் சிக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே ரூ.824 கோடி வங்கி கடன் ஏய்ப்பு வழக்கில் சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ் குமார் வெளிநாட்டுக்கு தப்பாமல் இருக்க, சிபிஐ சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கனிஷ்க் நிறுவன வழக்கில் பூபேஷ் குமார், அவரது மனைவி நீட்டு ஜெயின் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|