லிங்காயத் சமூகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து: கர்நாடக அரசு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 23, 2018, 20:45 [IST] கா்நாடகாவில் பல ஆண்டு காலமாக போராட்டம் நடத்தி வரும் லிங்காயத்து சமூகத்தினரின் கோாிக்கையை ஏற்று மார்ச் 19ம் தேதி சித்தராமையா தலைமையிலான அரசு அந்த சமூகத்தினருக்கு தனி மதம் என்ற அங்கீகாரத்தை வழங்கியது. மேலும் லிங்காயத்துக்களை தனி மதமாக அங்கீகரிக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கர்நாடக மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. இதன் அடுத்த நிகழ்வாக, கர்நாடக மாநில சிறுபான்மையினர் சட்டப் பிரிவு 2 (டி) படி, லிங்காயத்து சமுதாயத்தை சிறுபான்மையினர் மதமாக அங்கீகரிக்குமாறு, கர்நாடக மாநில சிறுபான்மையினர் ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளை ஏற்பது என்று கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து லிங்காயத்து சமுதாயத்தை சிறுபான்மையினர் மதமாக கர்நாடக அரசாங்கம் அங்கீகரித்து இன்று (23-03-2018) அறிவிப்பு வெளியிட்டது. லிங்காயத் மதத்தை சிறுபான்மை மதமாக அங்கீகரித்துள்ளதால், அதற்கென உள்ள சிறப்பு சலுகைகளை அம்மதத்தை பின்பற்றுபவர்கள் பெற முடியும்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|