பல்சுவை இணைய இதழ்
  


எச்.ராஜாவுக்கு மனநல பரிசோதனை: காவல்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 22, 2018, 16:20 [IST]

சென்னை: தமிழகத்தில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜாவைக் கைது செய்து மனநல பரிசோதனைக்கு உட்படுத்த கோரும் புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து சென்னை உயர் நீதி மன்றம் காவல்துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் பேசி வரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜாவை கைது செய்து மனநல மருத்துவரிடம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என சென்னை காவல் ஆணையர் மற்றும் அம்பத்தூர் காவல் ஆய்வாளரிடம் திருவேற்காட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் இந்த மாதம் 7ம் தேதி புகார் அளித்தார்.

இந்தப் புகார் குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாததால், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், தனது புகார் மீது காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ஹெச். ராஜாவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தக் கோரும் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

வழக்கு குறித்து காவல்துறையின் விளக்கத்தினைப் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து வழக்கு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

பிற செய்திகள்










சந்திரபாபு
ஆசிரியர்: முகில்
வகைப்பாடு : வாழ்க்கை வரலாறு
விலை: ரூ. 177.00
தள்ளுபடி விலை: ரூ. 160.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



ராஜாஜியின் பகவத்கீதை
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

இக பர இந்து மத சிந்தனை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

தடை... அதை உடை...
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

என்னருகே நீயிருந்தால்
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy

சரணாகதி
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)