குப்வாரா தாக்குதல்: 5 பாதுகாப்பு படையினர், 5 தீவிரவாதிகள் பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 22, 2018, 06:10 [IST] காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஹல்மாட்போரா பகுதியில், எல்லைக் கோட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில், தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை, 48 மணி நேரத்திற்கு பிறகு நேற்று புதன்கிழமை (21-03-2018) இரவு முடிவுக்கு வந்தது. குப்வாரா மாவட்ட போலீசார், எல்லை பாதுகாப்புப் படை மற்றும் பிராந்திய ராணுவம் ஆகியவை இணைந்து இந்த தாக்குதலை நடத்தின. எல்லைப் பாதுகாப்புக் கோட்டிலிருந்து இரண்டு மலைப் பள்ளத்தாக்குகளைக் கடந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரம் தீவிரவாதிகள் ஊருடுவியிருந்தனர். தீவிரவாதிகள் தங்களை அழைத்துச் செல்ல வந்தவர்களுடன் சேர்ந்து குப்வாரா நோக்கி பயணப்பட இருந்த நேரத்தில் போலீசாரால் அடையாளம் காணப்பட்டனர். தீவிரவாதிகள் மசூதியில் மறைந்திருந்தனர். போலீசாரைக் கண்டதும் அங்கிருந்து வனத்தை நோக்கி ஓட ஆரம்பித்தனர். ஆனால் அவர்களில் 4 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் ஒருவன் மட்டும் உயரமான இடத்தில் இருந்ததால் அவனை நோக்கிச் சென்ற பாதுகாப்பு படையினர் மீது சரமாரியாக சுட்ட வண்ணம் இருந்தான். கடைசியில் அவனும் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்தத் தாக்குதலில் தீபக் தெஷூ மற்றும் மொகம்மது யூசுப் என்ற இரு போலீசாரும், அஸ்ரப் ராதர் மற்றும் ரஞ்சித் கோல்கா என்ற இரு ராணுவ வீரர்களும் வீர மரணம் எய்தினர். வீர மரணம் எய்திய மூன்றாவது ராணுவ வீரர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. தாக்குதலில் காயம் அடைந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சிறப்பு பாதுகாப்பு போலீஸ் ஜாவத் அகமதுவின் நிலைமை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்து ஏராளமான படைக் கருவிகளும், ஏகே 47 ரக துப்பாக்கிகளும், கைக்குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காஷ்மீர் மாநில முதல்வர் மெஹ்பூபா முப்தி, வீரமரணம் அடைந்த அனைவருக்கும் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
|
கடைசிச் சொல் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2018 பக்கங்கள்: 344 எடை: 390 கிராம் வகைப்பாடு : தத்துவம் ISBN: 978-93-83067-50-3 இருப்பு உள்ளது விலை: ரூ. 300.00 தள்ளுபடி விலை: ரூ. 270.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: செயற்கரிய செயல்களைச் செய்தவர்களை மனிதகுலம் தங்களுடைய வழிகாட்டிகளாகக் கருதுகிறது. வாழ்வின் முன்னேற்றத்துக்கு, வாழ்க்கையில் வருகின்ற பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு, அவர்கள் சொன்னவையும் செய்தவையும் மற்றவர்களுக்குப் பெரிதும் வழிகாட்டியாக விளங்குகின்றன.தங்களது அறிவுரைகள், செயல்பாடுகள் மூலமாக மக்கள் பின்பற்றத்தக்க, ஒரு வாழும் முன்னோடியாக, உதாரணப் புருஷராக விளங்கிய இவர்கள், தங்களுடைய மரணத்தின் வழியாகவும் ஏன் ஒரு முன்மாதிரியாக விளங்கியிருக்க முடியாது? இந்த நோக்கத்தின் விளைவாக எழுந்ததுதான் இந்தப் புத்தகம். மனித குலத்தை உய்விக்க வந்தவர்கள் என்று போற்றப்படும் ஏசு, நபி, புத்தர், மகாவீரர் முதல் அவதாரங்கள் என்று துதிக்கப்படும் ராமர், கிருஷ்ணர் போன்றோர், அறிஞர்கள் எனப்படும் சாக்ரடீஸ் முதல் பெர்னாட் ஷா, மனத்தால் வாழ்பவர்களான கவிஞர்கள், காந்தி தொடங்கி எண்ணற்ற அரசியல் தலைவர்கள் என்று பலதரப்பட்ட உலகப் பிரபலங்கள் தங்களது மரணத்துக்கு முன்பு கடைசியாக என்ன சொன்னார்கள்? அதன்மூலம் அவர்கள் நமக்குச் சொல்ல வந்தது என்னவாக இருக்கக்கூடும்? இதைப் பற்றி மேற்கொண்ட விரிவான ஆராய்ச்சியின் விளைவே இந்தப் புத்தகம். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|