சென்னை: டிஜிபி அலுவலகம் முன் 2 காவலர் தீக்குளிப்பு முயற்சி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 21, 2018, 18:00 [IST] தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு ஆயுதப்படைக் காவலர்கள் ரகு மற்றும் கணேஷ் ஆகியோர் இன்று சென்னை காமராஜர் சாலையில் உள்ள காவல்துறை டிஜிபி அலுவலகத்தின் முன் தங்களின் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு அவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். காவல் துறை உயரதிகாரிகள் சாதி ரீதியான பாகுபாடு காட்டுவதாகவும், சாதி அடிப்படையில் பணியிடை மாற்றம் செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டி அவர்கள் இருவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அவர்கள் இருவரையும் அருகாமையில் இருந்த பிற காவலர்கள் தடுத்து தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றினர். ஏற்கெனவே இம்மாதம் 4ம் தேதி ஜெயலலிதா சமாதியில் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் அருண்ராஜ் (27) என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|