சென்னை : ஓடும் போதே இரண்டாக பிரிந்த மின்சார ரயில் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 21, 2018, 15:00 [IST] சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் மின்சார ரயில் ஒன்றின் பெட்டிகள் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால், ரயில் இரண்டாக பிரிந்தது. இதையடுத்து ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்திற்குள்ளான ரயில், நீண்ட நேரம் அதே இடத்தில் நின்றதால் கிட்டத்தட்ட 1 மணி நேரம் வரை ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மின்சார ரயிலை இணைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|