பெரியார் சிலையை உடைத்த மத்திய பாதுகாப்புப் படைவீரர் கைது கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 21, 2018, 08:25 [IST] புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் விடுதி என்ற கிராமம் உள்ளது. அங்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி அருகே பெரியார் முழு உருவச்சிலை பெரிய பீடத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. திங்கள்கிழமை (19-03-2018) இரவு சிலையின் தலை உடைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை அங்கு வந்தவர்கள் சிலை உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆலங்குடி போலீசாருக்கு சிலை சீரமைத்து, தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். சிலை அமைந்துள்ள பகுதியிலிருந்து கொஞ்சம் தூரத்தில் புதுக்கோட்டை செல்லும் சாலையில் டாஸ்மாக் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில், செந்தில்குமார் சம்பவம் நடந்த அன்று இரவு மூன்று முறை டாஸ்மாக் கடைக்கு வந்து சரக்கு வாங்கியது பதிவாகியுள்ளது. சந்தேகமடைந்த போலீஸார் அவரை பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாயின. செந்தில் குமார் என்னும் பெயருடைய அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய பாதுகாப்புப் படையில் (சி.ஆர்.பி.எஃப்.) வேலை செய்து வருவது தெரியவந்தது. அவர், குடிபோதையில் சிலை உடைப்பில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து உயர் அதிகாரிகளின் அனுமதியோடு, அவரை போலீசார் கைது செய்தனர். சேதப்படுத்தப்பட்ட பெரியாரின் முழு உருவச் சிலை கடந்த 25-4-2013 அன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியால் திறந்து வைக்கப்பட்டது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|