60 உயர் கல்வி நிறுவனங்களுக்கு முழு தன்னாட்சி வழங்கியது யூஜிசி< கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 21, 2018, 08:05 [IST] முழு தன்னாட்சி வழங்கப்பட்ட கல்வி நிறுவனங்களுள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், டெரி பல்கலைக்கழகம், மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகியவையும் அடங்கும். மொத்தம் 21 மாநில பல்கலைக்கழகங்கள் 26 தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் 8 பிற கல்லூரிகள் நேற்று யூஜிசியால் முழு தன்னாட்சி வழங்கப்பட்டன. இந்நிகழ்வை ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்தார். தமிழகத்தின் அழகப்பா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மற்றும் சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியவை முழு தன்னாட்சி பெற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. முழு தன்னாட்சி வழங்கப்பட்ட 8 கல்லூரிகளும், சொந்தமாக பட்டம் வழங்கும் சுதந்திரம் தவிர, பிற அனைத்து தன்னாட்சி உரிமைகளும் வழங்கப்படும்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|