பல்சுவை இணைய இதழ்
  


தகவல்கள் கசிவு: ஃபேஸ்புக் பங்குகள் மிகப்பெரிய சரிவு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 21, 2018, 04:40 [IST]

அமெரிக்கா: பேஸ்புக் பதிவுகள் அடங்கிய தகவல்களை, கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்கு முறை கேடாக அளித்ததாக தெரியவந்ததால், ஃபேஸ்புக் நிறுவன பங்குகள் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தன.

கடந்த 2016 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைப்பெற்ற அதிபர் தேர்தலில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்குப் பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம் அளித்ததாக தெரியவந்துள்ளது.

பேஸ்புக்கை பயன்படுத்தி வரும் 50 மல்லியன் மக்களின் பேஸ்புக் பதிவுகள் அடங்கிய தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துக்கு முறை கேடான முறையில் அளித்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த தகவல்தொழில்நுட்ப ஆணையர் கேம்பிரிட்ஜ் அனலைட்டிகா நிறுவனத்தின் இணையவழி சோதனை நடத்தியதில் இந்த தகவல் அவருக்கு கிடைத்திருக்கிறது. விசாரணையின் போது கேம்பிரிட்ஜ் அனலைட்டிகா நிறுவனம் போதிய ஒத்துழைப்பு வழங்காததன் காரணமாகவே அவர் இத்தகைய நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார்.

இந்த பிரச்னையைத் தொடர்ந்து கேம்பிரிட்ஜ் அனலைட்டிகா நிறுவனத்தின் தலைவர் அலெக்ஸாண்டர் நிக்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதன் எதிரொலியாக நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பேஸ்புக் நிறுவனப் பங்கு திங்கட்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சுமார் 7 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. சுமார் 40 பில்லியன் டாலர் அளவிலான சரிவு ஏற்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜூக்கபெர்க் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு 6 பில்லியன் டாலர் வரையில் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பேஸ்புக் நிர்வாகம், ஃபேஸ்புக் நிறுவனர், மார்க் ஜூக்கர்பெர்க்கை விசாரணைக்கு அழைத்துள்ளது.

பிற செய்திகள்










The Greatest Miracle In The World

ஆசிரியர்: Og Mandino
வகைப்பாடு : Self Improvement
Stock Available
விலை: ரூ. 175.00
தள்ளுபடி விலை: ரூ. 160.00
அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

Buy

நேரடியாக வாங்க : +91-94440-86888


எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888


தூரன் கட்டுரைகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

எந்த மொழி காதல் மொழி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

இந்திய தேசியப் பூங்காக்கள்
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

கதம்ப மலர்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)