பல்சுவை இணைய இதழ்
  


பெரியார் சிலை உடைப்பு காட்டுமிராண்டித்தனம் - ரஜினிகாந்த்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 20, 2018, 16:00 [IST]

சென்னை : இமயமலைக்கு ஆன்மிக பயணம் சென்று வந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, புதுக்கோட்டை ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது என தெரிவித்தார்.

கடந்த 10-ம்தேதி இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் புறப்பட்டார் ரஜினி. முதலில் இமாசலப்பிரதேசம் சென்று அங்குள்ள சுவாமியைச் சந்தித்தார். அடுத்து ரிஷிகேஷ் சென்று தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் இருந்த சுவாமியைப் பார்த்து ஆசீர்வாதம் பெற்றார். அதன்பின் அவருக்கு விருப்பமான ஸ்தலமான இமயமலை சென்றார். அங்குள்ள பாபா குகையில் தியானம் செய்தார்.

தனது ஆன்மிகப் பயணத்தை 10 நாள்களில் முடித்துக்கொண்ட ரஜினி இன்று காலை 11 மணிக்கு டெல்லியிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு மதியம் சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“மன நிம்மதி வேண்டி நான் இமயமலை சுற்றுப்பயணம் சென்றேன். தற்பொழுது மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கிறேன்.”

“தமிழகம், எப்போதுமே ஒரு மதச் சார்பற்ற நாடு. தமிழகத்தில் ராமராஜ்ய ரத யாத்திரை மூலம் மதக் கலவரங்கள் ஏற்படக் கூடாது. எனவே இதன் மூலம் யாரும் பாதிக்கப்படாமல் அரசு உரிய பாதுகாப்பு கொடுக்கும் என்று நம்புகிறேன்.”

“என் பின்னால் பாஜக இல்லை, என் பின்னால் கடவுளும் மக்களும் தான் இருக்கின்றனர்.”

“புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குளத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனம்.”

“திரைத்துறை வேலை நிறுத்தம் மட்டுமல்ல எல்லா துறையிலும் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்பதை நான் எப்போதுமே சொல்வேன்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 14ம் தேதி கட்சிக் கொடி அறிமுகப்படுத்தப் போவதாக வரும் செய்திக்கு ரஜினி மறுப்பு தெரிவித்தார்.

பிற செய்திகள்










அள்ள அள்ளப் பணம் 6 - மியூச்சுவல் ஃபண்ட்
ஆசிரியர்: சோம. வள்ளியப்பன்
வகைப்பாடு : வர்த்தகம்
விலை: ரூ. 140.00
தள்ளுபடி விலை: ரூ. 130.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



ஞானவியல்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

மனதின் ஓசை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

வீழாதே தோழா
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

ஊசியும் நூலும்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)