ஈராக்: ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய 39 இந்தியர் கொலை: சுஷ்மா கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 20, 2018, 15:05 [IST] ஈராக், மொசூல் நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்திருந்தபோது, அந்நகரில் வசித்த 39 இந்தியர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். இவர்கள் கட்டுமானப்பணிக்காக 2014-ம் ஆண்டு ஈராக் நாட்டுக்குச் சென்றனர். அவர்களின் நிலை குறித்த தகவல் ஏதுமில்லை. அவர்களை மீட்டு தர வேண்டும் என குடும்பத்தினர் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று ராஜ்யசபாவில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக சுஷ்மா அதிர்ச்சி தகவலை இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கே டி.என்.ஏ. சோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் 38 பேரின் டி.என்.ஏ. காணாமல் போன இந்தியர்களின் டி.என்.ஏ.வை ஒத்துள்ளது. ஒருவரின் டி.என்.ஏ. 70 சதவீதம் ஒத்துள்ளது. இதனை உறுதி செய்த பிறகே அவர்களின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடல்களை, இந்தியாவுக்கு கொண்டு வர அமைச்சர் விகே சிங் ஈராக் சென்றுள்ளார். அங்கிருந்து அமிதர்தசரஸ் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்படும்” என்றார். கடத்தப்பட்ட 39 பேரும் பஞ்சாப், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் இமாசலப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஈராக்கின் மோசூல் நகரில் பணியாற்றி வந்தனர். அவர்கள் மோசூல் நகரை விட்டு வெளியேற முயன்ற போது பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|