புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெரியார் சிலை சேதம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 20, 2018, 10:10 [IST] புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் பெரியார் சிலையின் தலைப்பகுதி சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலையில் பெரியார் சிலையின் தலை தனியாக கீழே கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். அண்மையில் தரிபுராவில் லெனின் சிலைகள் அகற்றப்பட்டது போல் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் அகற்றப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக பாஜக ஒன்றிய செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|