சசிகலா கணவர் நடராசன் காலமானார்! கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 20, 2018, 04:54 [IST] அவரது கல்லீரல், சிறுநீரகம் இரண்டையும் மாற்ற வேண்டும் என்கிற நிலை உருவானது. இதனை தொடர்ந்து தஞ்சையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த 2 உறுப்புகளையும் நடராஜனுக்கு தானமாக கொடுத்தார். உடல் உறுப்பு மாற்று ஆபரேஷன் மூலமாக நடராஜனுக்கு மாற்று கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை பொறுத்தப்பட்டன. 1 மாதம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை தேறிய நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 2-ந்தேதி நடராஜன் வீடு திரும்பினார். நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் தங்கி இருந்து அவர் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் நடராஜனுக்கு 17-ம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சு திணறலாலும் அவதிப்பட்டார். உடனடியாக அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற குளோபல் ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்தநிலையில், சிகிச்சை பலனளிக்காததால் நள்ளிரவு 1.30 மணியளவில் நடராசன் மரணமடைந்தார். அவரது உடல் எம்பார்மிங் முடிந்த பின் சென்னை பெசன்ட் நகர் வீட்டில் காலை 7 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுச் செல்லப்படும் எனத் தெரிகிறது. தஞ்சாவூரை சேர்ந்த நடராசன் அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாக வாழ்க்கையை தொடங்கியவர். கலெக்டர் சந்திரலேகாவுடன் ஏற்பட்ட நட்பால், அவர் மூலம் ஜெயலலிதாவின் அரசியல் பொதுக்கூட்டங்களை வீடியோ கவரேஜ் எடுக்கும் வேலையை தனது மனைவி நடத்தி வந்த 'வினோத் வீடியோ' கடைக்கு வாங்கி கொடுத்தார். இதன்மூலம் ஏற்பட்ட நட்பால் பின்னாளில் ஜெயலலிதாவுடனே சசிகலாவும், நடராசனும் தங்கினர். எம்.ஜி.ஆர். மறைவிற்கு பிறகு ஜெயலலிதா அ.தி.மு.க தலைமையை ஏற்ற பிறகு, அரசியல் தொடர்பான அனைத்து வேலைகளையும் நடராசன் கவனித்து வந்தார். பின்னர் ஜெயலலிதாவுடன் மனக்கசப்பு ஏற்பட்டு போயஸ்கார்டனை விட்டு வெளியேறினார். பின்னர் புதிய பார்வை இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராக பணியாற்றினார். அரசியல் நடவடிக்கைகளிலும் நடராசன் ஈடுபட்டு வந்தார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|