ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்வு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 19, 2018, 08:40 [IST] ரஷியாவில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் அதிபர் விளாடிமிர் புதின் (வயது 65), தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் பதவி வகிக்க போட்டியிட்டார். அவரை எதிர்த்து பவல் குருதினின், விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கை, செர்கெய் பாபுரின், கிரிகோரி யாவ்லின்ஸ்கை, போரிஸ் டிட்டோவ், கெசெனி சோப்சாக், மேக்சிம் சுராய்கின் என 7 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிபர் தேர்தலுக்காக 96 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. உள்ளூர் நேரப்படி காலை 8 மணி முதல் இரவு எட்டு மணி வரை வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்தவுடன், பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன. இதில் சுமார் 76% வாக்குகளைப் பெற்று விளாடிமிர் புதின் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பவல் குருதினின் 12% வாக்குகளைப் பெற்றார். இதையடுத்து தனது ஆதரவாளர்களிடம் பேசிய விளாடிமிர் புதின் “கடந்த சில ஆண்டுகளில் செய்த சாதனைகளுக்கான அங்கீகாரம். மக்களின் நம்பிக்கையையும், உறுதியையும் தேர்தல் முடிவுகள் மூலம் நான் காண்கிறேன்” என்றார். ரஷ்ய அதிபராக 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள புதின் அடுத்த 6 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|