மாலத்தீவில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை - 139 பேர் கைது கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 19, 2018, 08:25 [IST] மாலத்தீவின் அதிபர் அப்துல்லா யாமீன், அங்குள்ள 12 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ள எம்.பிக்களையும் எதிர்கட்சி தலைவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் தன் பதவியை தக்கவைக்க, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை வீட்டுக் காவலில் வைத்தார். முன்னாள் அதிபர் மவுமீன் அப்துல் கயூமும் கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி 5 தேதி அவசர நிலையையும் பிரகடனம் செய்தார். இந்த அவசர நிலை பிரகடனம் மார்ச் 25-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அவசரநிலை விதிகளின் கீழ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 139 பேரை போலீசார் நேற்று கைது செய்யப்பட்டனர். இதையடுத்து மாலத்தீவுகள் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|