நிடஹாஸ் டிராபி: கடைசி பந்தில் இந்தியா அபார வெற்றி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 18, 2018, 23:10 [IST] டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி வீரர்கள் துவக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. வங்கதேசஅணியின் சபீர் ரகுமான் 77 ரன்கள் விளாசினார். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சகால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 20 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரெய்னா ரன் ஏதும் எடுக்காமாலும் தவான் 10 ரன்களில் அவுட் ஆனார்கள். ஆனால் ரோகித் சர்மா நிலைத்து நின்று ஆடி 56 ரன் எடுத்தார். கே.எல். ராகுல் 24 ரன்களும், மனீஷ் பாண்டே 28 ரன்களும் எடுத்தனர். ஆனால் 18வது ஓவரில் விஜய் சங்கர் 4 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காதலால், நிலைமை மிகவும் மோசமானது. கடைசி 2 ஓவரில் 34 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாட வந்த தினேஷ் கார்த்திக் 18வது ஓவரில் 22 ரன்கள் எடுத்தார். இதனால் கடைசி ஓவரில் 12 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முதல் 4 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த நிலையில் 5வது பந்தில் விஜய் சங்கர் அவுட் ஆனார். கடைசி பந்தில் 5 ரன் எடுக்க வேண்டிய நிலையில் தினேஷ் கார்த்திக் அபாரமாக அடித்து 6 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற உதவினார். இவ்வாறு கடைசி பந்தில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வென்றது. தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகனாகவும், வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
|
வேணியின் காதலன் மொழி: தமிழ் பதிப்பு: 3 ஆண்டு: டிசம்பர் 2009 பக்கங்கள்: 144 எடை: 200 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-93-80072-61-6 இருப்பு உள்ளது விலை: ரூ. 100.00 தள்ளுபடி விலை: ரூ. 90.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: இதில் வரும் வேணியை எந்த நகரத்திலும் நீங்கள் சந்திக்க முடியும்.ஒருவிதமான சாஸ்வதமான இந்திய கீழ் நடு வர்க்கப் பெண் இவள். இவள் தன் உயிர்வாழ்தலுக்காக ஒவ்வொரு கட்டத்திலும் போராட வேண்டும்.காதல் என்பதெல்லாம், இவளுக்கு சந்தடி சாக்கில் வரும் உணர்ச்சிகளே! கூட்டத்தில் தள்ளிக்கொண்டு செல்வது போல விதி அல்லது ஓர் அபத்தமான நியதி இவளைத் தள்ளிக்கொண்டு செல்கிறது.ஏதோ தனக்கு நல்லது என்று பட்டதைச் செய்கிறாள்.வேணியின் உண்மையான காதலன் யார் என்று நீங்கள் புத்தகத்தை படித்தபின் யோசித்துப் பார்க்கலாம். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|