பல்சுவை இணைய இதழ்
  


பள்ளி விழா மின்வெளிச்சத்தால் 100 மாணவர்கள் கண் பார்வை பாதிப்பு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 17, 2018, 14:15 [IST]

நெல்லை: நெல்லையில் உள்ள தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு , அதிக விளக்கு வெளிச்சம் காரணமாக கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை அருகே உள்ள ஏர்வாடியில் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

நேற்று பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. இதில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்காக அமைக்கப்பட்ட மேடையில் அலங்கார மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. இதில் வைக்கப்பட்டிருந்த ஒரு சக்தி வாய்ந்த மின்விளக்கில் அதிகளவு ஒளி வெளிப்பட்டது. இதனால் சில மாணவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அந்த மின்விளக்கு அணைக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்தது.

நேற்றிரவு 70 மாணவ-மாணவிகள் மற்றும் 30 பெற்றோர்கள், 5 ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு அதிகளவு கண் எரிச்சல் ஏற்பட்டது. மேலும் சிலருக்கு கண்ணில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் இன்று காலை நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாணவர்களுக்கு லேசான பாதிப்புதான், அதிகளவில் பாதிப்பு இல்லை. இதனால் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

பிற செய்திகள்










வெட்கம் விட்டுப் பேசலாம்
ஆசிரியர்: சரவண கார்த்திகேயன்
வகைப்பாடு : இல்லறம்
விலை: ரூ. 145.00
தள்ளுபடி விலை: ரூ. 130.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



இக பர இந்து மத சிந்தனை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

சிட்டுக்குருவி
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

கதம்ப மலர்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

ஞானவியல்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)