பல்சுவை இணைய இதழ்
  


டிடிவி தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 17, 2018, 09:40 [IST]

கன்னியாகுமரி: டி.டி.வி. தினகரன் அணியில் இருந்து நான் விலகி விட்டேன் என நாஞ்சில் சம்பத் இன்று கன்னியாகுமரியில் அறிவித்துள்ளார்.

டி.டி.வி.தினகரன் தனது புதிய அமைப்பின் பெயரை ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்று கடந்த வியாழக்கிழமை (மார்ச் 15) மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.

மேலும் கருப்பு - வெண்மை - சிவப்பு வண்ண கொடியின் நடுவில் ஜெயலலிதாவின் படம் இடபெற்றுள்ள அமைப்பின் கொடியையும் அறிமுகம் செய்தார்.

பின்னர் மேடை முன்பு அமைக்கப்பட்டு இருந்த 100 அடி உயர கொடி கம்பத்தில் புதிய கொடியை ஏற்றினார்.

இந்நிலையில் இன்று நாஞ்சில் சம்பத், “தினகரன் தொடங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.அண்ணாவையும், திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி விட்டு கட்சி நடத்தலாம் என டி.டி.வி. தினகரன் நினைக்கிறார். இந்த அநியாயத்தை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.அரசியல் தமிழில் இனி அடைபட்டு கிடக்கமாட்டேன். அரசியலில் இனி நான் இல்லை. தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை காணலாம்” எனக் கூறியுள்ளார்.

பிற செய்திகள்










மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!
ஆசிரியர்: சுவாமி சுகபோதானந்தா
வகைப்பாடு : சுயமுன்னேற்றம்
விலை: ரூ. 215.00
தள்ளுபடி விலை: ரூ. 210.00
அஞ்சல்: ரூ. 50.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



இடர் களையாய்...
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

தொட்டிக் கட்டு வீடு
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy

அற்புத மகான்கள்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)