ரஷ்யாவில் தங்கம், வைரம் மழையாக பொழிந்த விமானம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 17, 2018, 09:25 [IST] ரஷ்யாவின் யாகுட்ஸ்க் விமான நிலையத்தில் இருந்து நேற்று தங்கம், பிளாட்டினம் மற்றும் வைரம் ஆகியற்றை ஏற்றி கொண்டு சரக்கு விமானம் புறப்பட்டுள்ளது. புறப்பட்ட ஒரு சில நொடிகளில் விமானத்தின் கதவில் சேதாரம் ஏற்பட்டு, தங்க கட்டிகள், பிளாட்டினம் மற்றும் வைரம் குவியல் குவியலாக மழை போன்று பொழிந்துள்ளது. அந்த சரக்கு விமானம் சுமார் 368 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2400 கோடி) மதிப்பிலான தங்கம், பிளாட்டினம் மற்றும் வைரம் ஆகியற்றை எடுத்துச் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து விமானம் அருகில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்து விலைமதிப்பற்ற பொருட்கள் தொலைந்துள்ளது. இதையடுத்து விமான நிலையத்தை அதிகாரிகள் மூடியுள்ளனர். அந்த விமானத்தில் அனுப்பப்பட்ட சரக்குகள் அனைத்தும், ரஷ்யாவில் வைர உற்பத்திக்குப் பெயர் போன ‘சிகோட்டா மைனிங் மற்றும் ஜியோலஜிகல்’ என்ற நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். விமானம் பழுதானது தெரியாமல் சரக்குகளை ஏற்ற அனுமதித்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் கொள்ளையர்களின் கைவரிசை ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து தொழில்நுட்ப அதிகாரிகள் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
|
துணையெழுத்து மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: டிசம்பர் 2018 பக்கங்கள்: 312 எடை: 400 கிராம் வகைப்பாடு : கட்டுரை ISBN: 978-93-87484-57-3 இருப்பு உள்ளது விலை: ரூ. 350.00 தள்ளுபடி விலை: ரூ. 315.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கையைத் தூண்டுகிறது.இதுவே துணையெழுத்தின் தனித்துவம். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|