குரங்கணி காட்டுத் தீ - உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 16, 2018, 19:35 [IST] 15-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த தீக்காயம் அடைந்து மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சென்னையைச் சேர்ந்த நிஷா, ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்த திவ்யா, கோவை மாவட்டம் கிணத்துக்கடவைச்சேர்ந்த திவ்யா விஸ்வநாதன் ஆகியோர் அடுத்தடுத்த நாட்களில் இறந்து போனார்கள். இந்தநிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்த கிரி மகன் கண்ணன் (வயது26) என்பவரும், சென்னையை சேர்ந்த முத்துமாலை என்பவர் மகள் அனுவித்யாவும் (25) நேற்று (15-03-2018) பரிதாபமாக உயிர் இழந்தனர். இதனால் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று (16-03-2018) மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த சேலம் எடப்பாடியைச் சேர்ந்த தேவி மற்றும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சக்திகலா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. குரங்கணி மலையில் நடந்த தீவிபத்து குறித்து விரிவான அறிக்கையை அளிக்க, மூத்த ஐஏஎஸ் அதிகாரி அதுல்யா மிஸ்ராவை விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்துள்ளது.
|
பாதி நீதியும் நீதி பாதியும் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: நவம்பர் 2019 பக்கங்கள்: 208 எடை: 200 கிராம் வகைப்பாடு : சட்டம் ISBN: 978-81-943348-3-5 இருப்பு உள்ளது விலை: ரூ. 225.00 தள்ளுபடி விலை: ரூ. 200.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நீதித் துறையே அரசமைப்பின் பாதுகாவலர் என்ற நிலையில் இவ்வகை செயல்பாடுகள் வரவேற்கப்படும் அதேநேரத்தில் சட்டமியற்றும் அவை, நிர்வாகம், நீதி இவற்றுக்கிடையிலான அதிகாரப் பிரிவினைகளின் எல்லைகள் மீறப்படுகிறதா என்ற கேள்விகளும் எழுகின்றன. இச்சிக்கல்களுக்கான தீர்வுகளை சட்ட விதிகளின்படியும் நீதித் துறை மரபுகளின்படியுமே அணுக வேண்டும் என்ற தீர்க்கரீதியான பார்வையொன்றை இந்த நூலில் இடம்பெற்றுள்ள நீதிநாயகம் கே.சந்துருவின் கட்டுரைகள் வழங்குகின்றன. சட்டங்களை விதிகளாகவும் உட்பிரிவுகளாகவும் விவரிக்கும் நிபுணத்துவத்திற்கு மேலாக விரிவான சரித்திரப் பின்னணியோடும் சமூக எதார்த்தத்தோடும் அதைப் பகுத்தாராயும் இக்கட்டுரைகள் சட்டத் துறைக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பு. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|