பல்சுவை இணைய இதழ்
  


ராமர் பாலத்தை அகற்றாமல் சேது சமுத்திரத் திட்டம் : மத்திய அரசு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 16, 2018, 12:25 [IST]

புதுடெல்லி: ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தென் தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவுத்திட்டம், சேது சமுத்திர திட்டம். இந்த திட்டம் நிறைவேறினால், கிழக்கு, மேற்கு கடற்கரை இடையே 424 கடல் மைல் தொலைவு குறையும். பயண நேரமும் 30 மணி நேரம் குறையும். இலங்கையை சுற்ற வேண்டியதும் இல்லை.

இந்த திட்டம் 2005-ம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டது. இந்த திட்டப்பணிகளால் ராமேசுவரத்துக்கும், மன்னாருக்கும் இடையே அமைந்துள்ள ராமர் பாலம் பாதிக்கப்படும் என கருத்து எழுந்தது.

ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்ககோரி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ராமர் சேது பாலத்தை இடிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை என பா.ஜனதா அரசு கூறி வந்தது.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படுத்தாமல் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

பிற செய்திகள்










அற்புதங்கள் உங்கள் கையில்
ஆசிரியர்: நெப்போலியன் ஹில்
மொழிபெயர்ப்பாளர்: PSV குமாரசாமி
வகைப்பாடு : சுயமுன்னேற்றம்
விலை: ரூ. 225.00
தள்ளுபடி விலை: ரூ. 205.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



அற்புத மகான்கள்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

செம்புலச் சுவடுகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

சரணாகதி
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

ஒன்றில் ஒன்று
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)