பா.ஜ.க. கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேறியது கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 16, 2018, 11:00 [IST] ஆந்திராவுக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து அளிக்காததால் சந்திரபாபு நாயுடு அதிருப்தியில் இருந்து வந்தார். மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கல் அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ்.சௌத்ரி ஆகியோர் தங்கள் பதவியை கடந்த 8-ஆம் தேதி ராஜிநாமா செய்தனர். நேற்று, ஆந்திர மாநிலத்தின் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தெரிவித்தது.அந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக சந்திரபாபு நாயுடு நேற்று தெரிவித்த நிலையில், இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சிக்கு மக்களவையில் 16, மாநிலகளவையில் 6 எம்பிக்கள் உள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றாலும் பாரதிய ஜனதா கட்சிக்கு இது பெரும் அடியாக பார்க்கப்படுகிறது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|