தினகரன் புதிய கட்சி, கொடி அறிவித்தார் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 15, 2018, 12:45 [IST] 9 மணிக்கே அமைப்பின் பெயரை அறிவிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் சரியாக 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் புதன் ஓரையில் அமைப்பின் பெயரை அறிவித்தார். அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை வழங்கினார் தினகரன். மேடையில் இருந்த பேனரில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உடன் சசிகலா புகைப்படமும் அவர்களுக்கு நிகராக டிடிவி தினகரன் புகைப்படம் இடம் பெற்றிருந்தது.
|
ராக்ஃபெல்லர் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 152 எடை: 185 கிராம் வகைப்பாடு : வெற்றிக் கதைகள் ISBN: 978-93-82577-64-5 இருப்பு உள்ளது விலை: ரூ. 133.00 தள்ளுபடி விலை: ரூ. 120.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ராக்ஃபெல்லரின் வாழ்க்கை ஒருவகையில் அமெரிக்க எண்ணெய் வர்த்தகத்தின் ஆரம்பகால வரலாறும்கூட! சாதனைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத வாழ்க்கை ராக்ஃபெல்லருடையது. அன்புமயமானவர். அளப்பரிய சாதனையாளர். எண்ணெய் வர்த்தகத்தின் முடிசூடா மன்னர். முடிவெடுப்பதில் அசாத்திய திறமை கொண்டவர். திட்டம் தீட்டுவதில் தன்னிகரற்றவர். ஏழைகளுக்கு அள்ளிக்கொடுப்பதில் வள்ளல். இப்படி ராக்ஃபெல்லரைப் பாராட்டுபவர்கள் ஒரு பக்கம். வெற்றிக்காக எந்தவொரு குறுக்குவழியையும் நாடத் தயாராக இருப்பவர். எதிரிகளைத் திட்டமிட்டு ஒழிப்பதில் கெட்டிக்காரர். அரசாங்கத்தை ஏமாற்றும் வித்தைகள் அனைத்தும் கைவரப்பெற்றவர். ஈவு, இரக்கம் என்பதே இவருடைய அகராதியில் கிடையாது. வர்த்தகத்தில் போட்டி இருக்கவேண்டும் என்று சொன்ன ராக்ஃபெல்லர், அந்தப் போட்டியில் தான் மட்டுமே வெல்லவேண்டும், தன்னுடைய ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனம் மட்டுமே உச்சத்தில் இருக்கவேண்டும் என்பதில் அசாத்திய பிடிவாதம் காட்டினார். அந்த வெற்றியை உறுதிசெய்ய அவர் செய்த சில காரியங்கள் அச்சமூட்டக்கூடியவை. அதன் காரணமாக அவர் சந்தித்த விமரிசனங்கள் அநேகம். அதேசமயம் ராக்ஃபெல்லரின் சில குணங்கள் பிரமிப்பை ஏற்படுத்தக்கூடியவை. அரசாங்கம், போட்டியாளர்கள், எதிரிகள் என்று எத்தனை முனைகளில் இருந்து நெருக்கடிகள் வந்தாலும் சரி. கலங்கமாட்டார். கவலைகொள்ளமாட்டார். மாறாக, இரண்டு ஆயுதங்களைப் பயன்படுத்துவார். ஒன்று, நிதானம். மற்றொன்று, துணிச்சல். வாழ்க்கையில் வெற்றிபெறத் துடிக்கும் ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டிய ஆயுதங்கள் இவை. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|