தமிழக பட்ஜெட் - 2018: முக்கிய அம்சங்கள் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 15, 2018, 12:30 [IST] தமிழக அரசின் வருவாய் ரூ.1.76 லட்சம் கோடியாகவும், செலவு ரூ.1.91 லட்சம் கோடியாகவும் இருக்கும். வருவாய் பற்றாக்குறை ரூ.17,490 கோடியாகவும் இருக்கும். தமிழக அரசிற்கு ஆயத்தீர்வை மூலம் ரூ.6,998 கோடி வருவாய் பத்திரப்பதிவு மூலம் 10,836 கோடி ரூபாய் வருவாய் வாகன வரி மூலம் 6,212 கோடி வருவாய் கிடைத்துள்ளது மத்திய வரிகளில் தமிழக்தின் பங்கு 31,051 கோடி ரூபாய். வரி அல்லாத வருவாய் 11,301 கோடி ரூபாய் மத்திய அரசின் மானியம் மூலம் 20,627 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு ரூபாய் வருவாய் வரும் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 3.55 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பீடு. திருநெல்வேலி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் உணவு பதப்படுத்தும் பூங்காக்கள் அமைக்கப்படும். மகளிர் சுகாதார திட்டத்தின் கீழ் சானிட்டரி நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி விரிவாக்கம் மையம் உருவாக்கப்படும். அதற்கு ரூ.2 கோடியை தமிழக அரசு மானியமாக வழங்கும். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பங்கு மூலதன உதவியாக ரூ.750 கோடி நிதி வழங்கப்படும். தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு. நெல் உற்பத்திக்கான ஊக்கத் தொகை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு. குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு. வரும் நிதியாண்டில் ரூ.250 கோடி செலவில் புதிய தடுப்பணைகள் கட்டப்படும். அத்திக்கடவு-அவிநாசி குடிநீர் திட்டம் ரூ.1,789 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அனுமதி வழங்கப்படும். குமரி, நெல்லை, மதுரை, கோவை அரசு மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 345 இடங்கள் உருவாக்கப்படும். மாற்றுத் திறனாளிகள் சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்க நிதி ரூ.10,000ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்வு. பயனாளிகள் எண்ணிக்கை 1000 பேரில் இருந்து 2000 பேராக உயர்வு. தமிழக போக்குவரத்துக் கழகத்துக்கு 3000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.8000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும். கிண்டியில் ரூ.20 கோடியில் பசுமைப் பூங்கா தொடங்கப்படும். ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி. தரங்கம்பாடி அருகே 220 கோடி ரூபாயில் மீன் பிடி துறைமுகம். ராமநாதபுரம் மாவட்டம் குத்துக்கல்லில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளம். திருமண உதவி திட்டத்திற்கு 724 கோடி ஒதுக்கீடு. பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த 333.36 கோடி ரூபாய் ஒதுக்கீடு. கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள பாரம்பரியமிக்க கட்டடங்கள் புதுப்பிக்கப்படும். 12,301 கோடி ரூபாயில் சென்னை சுற்றுவட்டப் பாதை மேம்படுத்தப்படும். 2018-19ம் நிதியாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9% என மதிப்பிடப்பட்டுள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|