செவ்வாழையின் மருத்துவ குணங்கள் வீடியோ உலக மக்களால் அதிகம் சாப்பிடப்படும் பழம் வாழைப்பழம். அதன் ஒரு வகையான செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. பல்வேறு நோய்களிலிருந்து செவ்வாழை நம்மைக் காக்கிறது. செவ்வாழையில் 50 சதவீதம் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் மற்றும் மூலநோய் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் விரைவில் அந்நோயிலிருந்து விடுபடலாம். செவ்வாழையில் அதிகமாக உள்ள பீட்டா-கரோட்டீன், தமனிகள் தடிமனாவதைத் தடுத்து, இதய நோய், புற்று நோயிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டின் உடலில் சென்று வைட்டமின் ஏ வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும், சரும ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் இது சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கிறது. மேலும் செவ்வாழையில் உள்ள பொட்டாசியம் உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளுக்கு பலம் சேர்க்கிறது. இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிக்க செவ்வாழையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உதவுகின்றன. ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க செவ்வாழை மிகவும் உதவியாக இருக்கும். செவ்வாழையில் உள்ள ஆன்டாசிட் தன்மையினால் நெஞ்செரிச்சல் பிரச்சனை நீங்கும். நரம்புத் தளர்ச்சி மற்றும் ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் தினசரி இரவு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் விரைவில் இந்த குறைபாடுகள் நீங்கும். பல்வலி, பல்லசைவு போன்ற பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும். நாள் முழுதும் புத்துணர்ச்சியாக இருக்க தினம் ஒரு செவ்வாழையை சாப்பிடுங்கள். |
கல் சிரிக்கிறது மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஏப்ரல் 2016 பக்கங்கள்: 96 எடை: 150 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-93-84301-48-4 இருப்பு உள்ளது விலை: ரூ. 70.00 தள்ளுபடி விலை: ரூ. 65.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தெய்வத்தை கல்லில் வடிக்கிறோம். நம் ஆர்வத்திலும் ஆவாஹனத்திலும் ஆராதனையிலும் கல்லை மறந்து தெய்வத்தை பார்க்கிறோம். விக்ரஹத்தின் மந்தஹாஸ்த்தில் அத்தனை மயக்கு. உருவேற்றலில் அத்தனை உயிர்ப்பு. நம் சமயத்துக்கேற்ப, நம் செளகரியத்தின்படி, அந்தச் சிரிப்பில் அர்த்தத்தை படித்துக்கொண்டு, உத்தேசித்த காரியத்துக்குத் தெய்வத்தி அனுமதி கிடைத்தி விட்டதாக எண்ணிக்கொண்டு, காரியத்தில் இறங்குகிறோம். காரியம் எதிர்பார்த்தபடி அனுகூலமாக முடிந்தால், தெய்வம் சிரிக்கிறது என்கிறோம். மாறாகத் திரும்பிவிட்டால், கல் சிரிக்கிறது என்கிறோம். ஆனால் சிரிப்பது தெய்வமுமில்லை; கல்லுமில்லை. எண்ணம்தான் சிரித்துக் கொண்டே இருக்கிறது. ஆகவே பயத்துக்குரியது எண்ணம்தான். அதுவும் அவனவன் எண்ணமே. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|