|
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் வீடியோ உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீரால் உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது. எனவே உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் முறையானது ஜப்பானில் இருந்து வந்ததாகும். ஜப்பானியர்கள் தினமும் காலையில் 4 டம்ளர் தண்ணீரை குடிப்பார்கள். பின்னர் 1 மணிநேரத்திற்கு எதுவும் சாப்பிடமாட்டார்கள். இதற்கு தண்ணீர் தெரபி என்று பெயர். இதனால் தான் ஜப்பானியர்கள் எப்போதும் சுறுசுறுப்புடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கின்றனர். அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது குடலானது சுத்தமாகும். தண்ணீர் குடித்த சிறிது நேரத்திலேயே மலம் கழிப்பதால், உடலில் உள்ள கழிவுகளானது முற்றிலும் வெளியேறிவிடும். உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை தண்ணீரானது சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். காலையில் சாப்பிட நேரமில்லாதவர்கள், குறைந்த பட்சம், தினமும், காலையில், வெறும் வயிற்றில், தண்ணீர் மட்டுமாவது குடித்து வந்தால், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம். நீர்ச்சத்து குறைவாக இருப்பவருக்கு, தலைவலி அடிக்கடி ஏற்படும். அவர்கள், தினமும், அதிகாலையில், வெறும் வயிற்றில், தண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து, தலைவலி குறையும். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்த சிவப்பணுக்களின், வளர்ச்சி அதிகரித்து, இரத்தம் அதிக ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால், உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறையும். குடலானது சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். தினமும் காலையில் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும். தண்ணீரை வெறும் வயிற்றில் காலையில் குடித்து வந்தால், இதயத்தில் இரத்த அழுத்தம் சீராகி, இதய நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். எனவே நீங்களும் இனிமேல் தினமும் காலை எழுந்தவுடன் தண்ணீர் குடித்து ஆரோக்கியமாக வாழுங்கள். |
|