பல்சுவை இணைய இதழ்
  


உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்


வீடியோ



     குழந்தைகளோ, பெரியவர்களோ உலர் திராட்சையைப் பார்த்துவிட்டால் இரண்டு மூன்றையாவது எடுத்து வாயில் போடாமல் நகர மாட்டார்கள். பார்த்தவுடனேயே சாப்பிடத் தூண்டும் ஈர்ப்பு உலர் திராட்சைக்கு உண்டு.

     உயர்ந்த ரக திராட்சையை தரம்பிரித்து காய வைத்து உலர் திராட்சை தயாரிக்கப்படுகிறது.

     உலர் திராட்சையில் கால்சியம், இரும்புச் சத்து, நார் சத்து , மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி, சி, போன்ற பல்வேறு சத்துக்களும் மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன.

     100 கிராம் உலர்திராட்சையில் 299 கலோரிகள் உள்ளன.

     100 கிராம் உலர்திராட்சையில் 23 சதவிகிதம் இரும்புச்சத்து உள்ளதால் முடி உதிர்வு பிரச்னை உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

     பெண்களுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். பெண்கள் உலர்திராட்சையை தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக்கொண்டால், மாதவிடாய்க் கால வலி நீங்கும்; ஆரோக்கியம் கூடும்; ரத்தசோகை போன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம்.

     இரும்புச்சத்து இதில் அதிகம் உள்ளதால், உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தாராளமாக இதைச் சாப்பிடலாம்.

     வைட்டமின் ஏ சத்து இருப்பதால், கண்ணாடி அணிந்திருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், பார்வைக்குறைபாடு நீங்கும்; பார்வைத்திறன் மேம்படும்.

     இதயத் துடிப்பை சீராக வைத்திருப்பதற்கு பொட்டாசியம் சத்து தேவை. உலர்திராட்சையை சாப்பிடுவதால், நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் பொட்டாசியம் சத்து பரவும்; நல்ல பலன் தரும்.

     இதில் நார்ச்சத்தும் இருப்பதால், உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவும். எனவே சர்க்கரை நோயாளிகளும், உலர்திராட்சையை தாராளமாகச் சாப்பிடலாம்.

     மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர் திராட்சையை சாப்பிட்டு வர, காமாலை நோய் குணமடையும்.

     மலச்சிக்கல் உள்ளவர்கள், உலர் திராட்சையை இரவு உறங்கும் முன், ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால், மறுநாள் காலை அதன் பலன் தெரியும்.

     குழந்தைக்கு பால் காய்ச்சும் போது, அதில் இரண்டு பழத்தை துண்டு செய்து போட்டு, காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், குழந்தை ஆரோக்கியமாக வளரும்.

     மூலநோய் உள்ளவர்கள், தினசரி உணவுக்குப் பின்னர், காலையிலும், மாலையிலும், 25 உலர்திராட்சைப் பழங்களை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.

     நரம்புக் தளர்ச்சி, மற்றும் தாம்பத்திய குறைபாடுகள் உள்ளவர்களுக்கு கருப்பு உலர் திராட்சையை ஒரு மாதம் உண்டு வந்தாலே நரம்புகள் வலுப்படும்.

     குழந்தைக்கு பால் கொடுக்கும் பெண்கள், இரவு உணவுக்குப் பிறகு கைப்பிடியளவு உலர்ந்த திராட்சைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால், சத்தான பால் உற்பத்தியாகும்.

     தொண்டைக்கட்டு பிரச்சினை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சை பழங்களை பசும்பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகை, தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

     எனவே நீங்களும் இனிமேல் தினமும் இரவில் உலர் திராட்சையை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.













ஏழாவது அறிவு (மூன்று பாகங்கள்)
ஆசிரியர்: வெ. இறையன்பு
வகைப்பாடு : சுயமுன்னேற்றம்
விலை: ரூ. 520.00
தள்ளுபடி விலை: ரூ. 490.00
அஞ்சல்: ரூ. 60.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



மனதின் ஓசை
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

ராஜாஜியின் பகவத்கீதை
இருப்பு உள்ளது
ரூ.90.00
Buy

இக பர இந்து மத சிந்தனை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)