27 நட்சத்திரக் கோயில்கள்


     அஸ்வினி முதல் ரேவதி வரை மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அவரவருடைய நட்சத்திரங்களுக்கு உரிய கோயிலுக்குச் சென்று வழிபடுவது வாழ்வில் மிகுந்த நற்பலனைத் தரும். ஒவ்வொருவருக்கும் பிடித்த கடவுளையோ, குலதெய்வத்தையோ வழிபடுவதோடு அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய கோயில் வழிபாடும் மிகவும் அவசியமாகும். 27 நட்சத்திரங்களுக்கும் உரிய லிங்கங்கள் உள்ள கோயில்கள் தமிழ்நாட்டில் இரண்டு உள்ளன. அங்கும் சென்று அவரவருடைய நட்சத்திர லிங்கத்திற்கு குறிப்பிட்ட நட்சத்திர நாளில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும். 27 நட்சத்திரங்களுக்குரிய லிங்கங்கள் உடைய முதலாவது கோவில் திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமிகள் எனப்படும் ஆதிபுரீஸ்வரர் அல்லது படம்பக்க நாதர் சிவன் கோயில். இரண்டாவது கோயில் திருவிடைமருதூரில் உள்ள சிவன் கோயில்.

     ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய கோயில்கள் இறைவன் பெயர், கோயில் இருக்கும் ஊர் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நட்சத்திரம்
கோயில்
அசுவினி
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில்
பரணி
நல்லாடை அக்னீஸ்வரர் கோயில்
கார்த்திகை
கஞ்சாநகரம் காத்ர சுந்தரேஸ்வரர் கோயில்
ரோகிணி
காஞ்சிபுரம் பாண்டவதூதப்பெருமாள் கோயில்
மிருகசீரிடம்
எண்கண் ஆதிநாராயணப்பெருமாள் கோயில்
திருவாதிரை
அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் கோயில்
புனர்பூசம்
வாணியம்பாடி அதிதீஸ்வரர் கோயில்
பூசம்
விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில்
ஆயில்யம்
திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோயில்
மகம்
விராலிப்பட்டி மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்
பூரம்
திருவரங்குளம் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் கோயில்
உத்திரம்
இடையாற்று மங்கலம் மாங்கல்யேஸ்வரர் கோயில்
அஸ்தம்
கோமல் கிருபாகூபாரேச்வரர் கோயில்
சித்திரை
குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள் கோயில்
சுவாதி
சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோயில்
விசாகம்
பண்பொழி முத்துக்குமாரசுவாமி கோயில்
அனுஷம்
திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோயில்
கேட்டை
பசுபதிகோவில் வரதராஜப்பெருமாள் கோயில்
மூலம்
மப்பேடு சிங்கீஸ்வரர் கோயில்
பூராடம்
கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்
உத்திராடம்
கீழப்பூங்குடி பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
திருவோணம்
திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்
அவிட்டம்
கீழக் கொருக்கை பிரம்மஞான புரீஸ்வரர் கோயில்
சதயம்
திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்
பூரட்டாதி
ரங்கநாதபுரம் திருவானேஷ்வர் கோயில்
உத்திரட்டாதி
தீயத்தூர் சகஸ்ரலட்சுமீஸ்வரர் கோயில்
ரேவதி
காருகுடி கைலாசநாதர் கோயில்