ஸ்ரீமத் பாகவதம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 275.00 தள்ளுபடி விலை: ரூ. 250.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: கடவுளைத் தேடும் ஆன்ம யாத்திரையை எளிமைப்படுத்தவே இந்திய இதிகாசங்களும் தத்துவங்களும் புராணங்களும் விதவிதமாக முயற்சிக்கின்றன. பேரொளி வடிவான பரம் பொருளின் ஓசை வடிவான வேதம், ஜீவன்களின் மீது கொண்ட கருணையால் அவதாரமெடுத்தது; அதுவே கண்ணன். தேவகியின் மணிவயிற்றில் குடியேறிய கணம் முதல், ஒரு வேடனின் அம்பு தைத்து வைகுந்தம் ஏகும் வரையிலான கண்ணனின் வாழ்க்கை ஒரு போராளிக்கானது. பிறக்கும் முன்பே எதிரியான கம்சனை எதிர் கொண்டார். பிருந்தாவனவாசிகளுக்காக இந்திரனின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முழங்கினார். மகாபாரத யுத்தத்தை வழிநடத்தினார். சொந்த இனமே இடம் தெரியாமல் அழிந்ததை கொஞ்சமும் சலனமில்லாது கண்டார். இதற்கிடையே காதலும் கனிவும் வேதமும் வேதாந்தமும் கலந்த ரசமான வாழ்க்கை அவருடையது. எத்தனை இடர் வந்தபோதிலும் கண்ணனின் புன்னகை தவழும் முகத்தில் வாட்டம் எட்டிப் பார்த்ததில்லை. அவரது வாழ்க்கையே கொண்டாட்டமாக இருந்ததால், அவர் இன்றும் நம் உள்ளம் கவர் கள்வனாய் வளைய வருகிறார். அதனாலேயே அவரது சரிதம் ஜீவன்களின் பாதையாக சமைந்தது. பரீட்சித்தின் வாயிலாக சுகப்பிரம்ம ரிஷி மனித குலத்திற்கு வழங்கிய பாகவதம் என்கிற மதுரமான தத்துவம், கண்ணன் என்கிற வசீகர விஷயத்தால் எளிமையாக்கப்பட்டு மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறது. ரிஷிகளின் இந்த வித்தைக்கு சற்றும் குறைவில்லாது ‘தினகரன் ஆன்மிக மலரில்’ பாகவதத்தை தொடராகத் தந்தபோது நமது வாசக அன்பர்கள் பாகவதக் கடலில் மூழ்கித் திளைத்தார்கள். பாகவதம், தேன் என எத்தனை விதமாய் எத்தனை வசீகரமான வார்த்தைகளால் சொன்னாலும் நிறைவாகாது. ஒரு துளி நாவில் பட்டுவிட்டால் வார்த்தைகளே தேவை இல்லை. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|