தினசரி தியானம் |
ஞானக் கண் கண்ணில்லாக் கழுகு வெறும் சிறகு கொண்டு பறக்க முடியாது. ஞானக் கண்ணில்லாத கருமம் அத்தகையது. நல்லறிவே, நீ எனக்கு ஞானக் கண்ணை நல்குவாயாக. உடலுக்கு ஒளி தருவது ஞானக் கண். அது சுடர் விட்டு ஒளிரும்போது உடலெங்கும் ஆத்மஜோதி ஒளிர்கிறது. ஞானக் கண்ணில்லாதவர்க்கு உடல் முழுதும் இருள் சூழ்ந்ததாகிவிடுகிறது. கண்மேலும் கண்ணொன்று உடையாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி. -அப்பர் குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை - 639115. திருச்சி மாவட்டம். |
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|