தமிழ்திரைஉலகம்.காம் - திரைப்படத் தகவல்கள் : தாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) (1943) | தமிழறியும் பெருமாள் (1942)

பல்சுவை இணைய இதழ்
  



108 திவ்ய தேசங்கள்

     ஆழ்வார் பாசுரங்களின் தொகுப்பான, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆழ்வார்களால் பாடப் பெற்ற (மங்களா சாசனம் செய்யப்பட்ட) திவ்ய தேசங்கள் எனப்படும் திருக்கோயில்கள் மொத்தம் 108 ஆகும். இவற்றில் 105 கோயில்கள், இந்திய துணைக்கண்டத்திலும், 1 (சாளக்கிராமம்) நேபாளத்திலும் உள்ளன. மற்ற இரண்டும் விஷ்ணுவின் விண்ணுலக உறைவிடங்களாக உருவகப்படுத்தப்பட்ட பரமபதமும் (வைகுந்தம்), திருப்பாற்கடலும். இவை வைணவத் திருப்பதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

     பூவுலகில் உள்ள 106 புனிதத்தலங்களில், 40 முந்தைய சோழ நாட்டிலும், 2 நடு நாட்டிலும் (கடலூர் அருகில்), 22 தொண்டை நாட்டிலும், 11 வட நாட்டிலும் (ஆந்திரா, உ.பி, குஜராத், நேபாளம்), 13 மலை நாட்டிலும் (கேரளம்), 18 பாண்டி நாட்டிலும் அமைந்துள்ளன.

     திவ்ய தேசங்கள் சிலவற்றில்(60) நின்ற திருக்கோலத்தோடும், சிலவற்றில்(27) கிடந்த திருக்கோலத்தோடும், சிலவற்றில்(21) வீற்றிருந்த திருக்கோலத்தோடும் மஹாவிஷ்ணு காட்சி தருகிறார்.

1. ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில், திருச்சி



4. திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோயில், திருச்சி

5. அன்பில் அருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், திருச்சி

6. கோவிலடி, அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில், தஞ்சாவூர்

7. கண்டியூர் அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்

8. திருக்கூடலூர் அருள்மிகு ஸ்ரீ வையம்காத்த பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்

9. கபிஸ்தலம் அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில், தஞ்சாவூர்

10. பூதங்குடி அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில், திருப்புள்ளம், தஞ்சாவூர்

11. ஆதனூர் அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், தஞ்சாவூர்

12. கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், தஞ்சாவூர்

13. திருநாகேஸ்வரம் அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், தஞ்சாவூர்

14. நாச்சியார்கோயில் அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில், தஞ்சாவூர்

15. திருச்சேறை அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்

16. திருக்கண்ணமங்கை அருள்மிகு பக்தவத்சலபெருமாள் திருக்கோயில், திருவாரூர்

17. திருக்கண்ணபுரம் அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

18. திருக்கண்ணங்குடி அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

19. திருநாகை அருள்மிகு நீலமேக, சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

20. தஞ்சைமாமணி கோயில் அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்

21. திரு நந்திபுர விண்ணகரம் (நாதன் கோயில்) அருள்மிகு ஜெகநாதன் திருக்கோயில், தஞ்சாவூர்

22. திருவெள்ளியங்குடி அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில், தஞ்சாவூர்

23. திருவழுந்தூர் (தேரழுந்தூர்) அருள்மிகு தேவாதிராஜன் கோயில், நாகப்பட்டினம்

24. திருச்சிறுபுலியூர் அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில், திருவாரூர்

25. தலச்சங்காடு அருள்மிகு நாண்மதியப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

26. திரு இந்தளூர் அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

27. திருக்காவளம்பாடி அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், நாகப்பட்டினம்

28. சீர்காழி அருள்மிகு திரிவிக்கிரமன் திருக்கோயில், நாகப்பட்டினம்

29. திரு அரிமேய விண்ணகரம் அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில், நாகப்பட்டினம்

30. திருவண் புருடோத்தமம் (சீர்காழி) அருள்மிகு புருஷோத்தமர் திருக்கோயில், நாகப்பட்டினம்

31. திரு செம்பொன்செய் கோயில் அருள்மிகு பேரருளாளன் (செம்பொன்னரங்கர்) திருக்கோயில், நாகப்பட்டினம்

32. திருமணிமாடக் கோயில் அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், நாகப்பட்டினம்

33. திரு வைகுந்த விண்ணகரம் (திருநாங்கூர்) அருள்மிகு வைகுண்ட நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

34. திருவாலி திருநகரி அருள்மிகு அழகியசிங்கர் கோயில், நாகப்பட்டினம்

35. திருத்தேவனார்த்தொகை அருள்மிகு தெய்வநாயகர் திருக்கோயில், நாகப்பட்டினம்

36. திருத்தெற்றியம்பலம் அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில், நாகப்பட்டினம்

37. திருமணிக்கூடம் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

38. திருவெள்ளக்குளம் அருள்மிகு சீனிவாசப்பெருமாள்(அண்ணன் பெருமாள்) நாகப்பட்டினம்

39. திரு பார்த்தன் பள்ளி, அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில், நாகப்பட்டினம்

40. திருச்சித்திரக்கூடம் ஸ்ரீ கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில், சிதம்பரம்

41. திருவகிந்திபுரம் அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில், கடலூர்

42. திருக்கோயிலூர் அருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோயில், விழுப்புரம்

43. திருக்கச்சி (அத்திகிரி, அத்தியூர்) அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

44. அஷ்டபுயகரம் அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் (அஷ்டபுஜப்பெருமாள்), காஞ்சிபுரம்

45. திருத்தண்கா (தூப்புல்) அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

46. திருவேளுக்கை அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

47. திரு நீரகம், ஸ்ரீ ஜகதீச்வரர் ஸ்ரீ நிலமங்கை வல்லி (உலகளந்தப் பெருமாள் கோவில் உள்ளே) காஞ்சிபுரம்

48. திருப்பாடகம் அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

49. திரு நிலா திங்கள் துண்டம் அருள்மிகு நிலாத்துண்டப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

50. திரு ஊரகம் அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

51. திருவெக்கா அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள், காஞ்சிபுரம்

52. திருக் காரகம் கருணாகரப் பெருமாள், பத்மாமணி நாச்சியார், ரமாமணி நாச்சியார் (உலகளந்த பெருமாள் கோயில் உள்ளே), காஞ்சிபுரம்

53. திருக் கார்வானம் ஸ்ரீ கள்வப்பெருமாள் சுவாமி திருக்கோயில், (உலகளந்த பெருமாள் கோவில் உள்ளே), காஞ்சிபுரம்

54. திருக்கள்வனூர் அருள்மிகு கள்வப்பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

55. திருப் பவளவண்ணம் அருள்மிகு பவளவண்ணப்பெருமாள் சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்

56. பரமேஸ்வர விண்ணகரம் அருள்மிகு பரமபதநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்

57. திருப்புட்குழி அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

58. திருநின்றவூர் அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர்

59. திருஎவ்வுள் அருள்மிகு வீரராகவர் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர்

60. திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், சென்னை


62. திருவிடந்தை அருள்மிகு நித்ய கல்யாணபெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

63. மகாபலிபுரம் அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

64. சோளிங்கர் (திருக்கடிகை) அருள்மிகு ஸ்ரீ யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், வேலூர்

65. அயோத்தி அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், உத்தரபிரதேசம்

66. திரு நைமிசாரண்யம் ஸ்ரீ தேவராஜா பெருமாள் கோவில், உத்தர பிரதேசம்

67. திருப்பிரிதி (நந்தப் பிரயாக், ஜோஷி மடம்), சாமோலி, உத்தரகாண்ட்.

68. திருக்கண்டங்கடிநகர் (தேவப்ரயாகை) அருள்மிகு ரகுநாதர் கோவில், ரிஷிகேஷ், உத்ராஞ்சல்.

69. திரு வதரி ஆசிரமம் (பத்ரிநாத்) ஸ்ரீ பத்ரி நாராயண பெருமாள் கோவில், சாமோலி, உத்தராகண்ட்

70. திரு சாளக்ராமம், அருள்மிகு மூர்த்தி பெருமாள் கோவில், முக்திநாத், நேபாளம்.

71. திரு வட மதுரை (கோவர்த்தனம்) அருள்மிகு கோவர்த்தநேசன் கோவில், மதுரா, தில்லி

72. திருவாய்ப்பாடி (கோகுலம்) அருள்மிகு ஸ்ரீ நவ மோகன கிருஷ்ணன் கோவில், மதுரா, தில்லி

73. திரு த்வாரகை அருள்மிகு துவாரகாதீசர் கோயில், துவாரகை, குஜராத்

74. திருசிங்கவேழ்குன்றம் (அஹோபிலம்) அருள்மிகு பிரகலாத வரதன் திருக்கோயில், கர்நூல், ஆந்திரா

75. திருவேங்கடம் அருள்மிகு வெங்கடாசலபதி (மலையப்ப சுவாமி) திருக்கோயில், திருப்பதி, ஆந்திரா

76. திருநாவாய் அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், பாலக்காடு

77. திருவித்துவக்கோடு அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில், பாலக்காடு

78. திருக்காட்கரை ஸ்ரீ காட்கரையப்பன் திருக்கோயில், கொச்சி

79. திருமூழிக்களம் அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், எர்ணாகுளம்

80. திருவல்லவாழ் அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், பந்தனம் திட்டா

81. திருக்கடித்தானம் ஸ்ரீ அற்புத நாராயண பெருமாள் கோவில், கோட்டயம், கேரளா

82. திருச்செங்குன்றூர் (திருசிற்றாறு) அருள்மிகு இமையவரப்பன் திருக்கோயில், ஆலப்புழா

83. திருப்புலியூர் அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில், ஆழப்புழா

84. திருவாறன்விளை அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில், பந்தனம்திட்டா, கேரளா

85. திருவண் வண்டூர் அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில், ஆழப்புழா, கேரளா

86. திருவனந்தபுரம் அருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில், கேரளா

87. திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோயில், கன்னியாகுமரி

88. திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், நாகர்கோவில்

89. திருக்குறுங்குடி அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில், திருநெல்வேலி

90. திருசிரீவரமங்கை (நாங்குனேரி) அருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில், திருநெல்வேலி

91. ஸ்ரீவைகுண்டம் அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில், தூத்துக்குடி

92. திருவரகுணமங்கை (நத்தம்) அருள்மிகு விஜயாசனர் (பரமபத நாதன்) திருக்கோயில், தூத்துக்குடி

93. திருப்புளியங்குடி அருள்மிகு பூமிபாலகர் (காய்ச்சின வெந்த பெருமாள்) திருக்கோயில், தூத்துக்குடி

94. திரு தொலைவில்லிமங்கலம் (ரெட்டைத் திருப்பதி) அருள்மிகு அரவிந்த லோசனர், ஸ்ரீ நிவாசன் திருக்கோயில், தூத்துக்குடி

95. திருக்குளந்தை (பெருங்குளம்) அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், தூத்துக்குடி

96. திருக்கோளூர் அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில், தூத்துக்குடி

97. தென்திருப்பேரை அருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில், தூத்துக்குடி

98. திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி) அருள்மிகு ஆதிநாதன் கோயில் திருக்கோயில், தூத்துக்குடி

99. ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு வடபத்ரசாயி (ரங்கமன்னார், ஆண்டாள்) திருக்கோயில், விருதுநகர்

100. திருத்தங்கல் அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், விருதுநகர்

101. திருக்கூடல் அருள்மிகு கூடலழகர் திருக்கோயில். மதுரை

102. அழகர்கோவில் (திருமாலிரும் சோலை) அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், மது‌ரை

103. திருமோகூர் அருள்மிகு காளமேகப்பெருமாள் கோயில், மதுரை



106. திருமயம் அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், புதுக்கோட்டை

107. திருப்பாற்கடல், ஸ்ரீ க்ஷீராப்தி நாதன், ஸ்ரீ கடல் மகள் நாச்சியார்

108. பரமபதம், பரமபதநாதன், பெரிய பிராட்டியார்









எமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக!