|
27 நட்சத்திரக் கோயில்கள் அஸ்வினி முதல் ரேவதி வரை மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அவரவருடைய நட்சத்திரங்களுக்கு உரிய கோயிலுக்குச் சென்று வழிபடுவது வாழ்வில் மிகுந்த நற்பலனைத் தரும். ஒவ்வொருவருக்கும் பிடித்த கடவுளையோ, குலதெய்வத்தையோ வழிபடுவதோடு அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய கோயில் வழிபாடும் மிகவும் அவசியமாகும். 27 நட்சத்திரங்களுக்கும் உரிய லிங்கங்கள் உள்ள கோயில்கள் தமிழ்நாட்டில் இரண்டு உள்ளன. அங்கும் சென்று அவரவருடைய நட்சத்திர லிங்கத்திற்கு குறிப்பிட்ட நட்சத்திர நாளில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும். 27 நட்சத்திரங்களுக்குரிய லிங்கங்கள் உடைய முதலாவது கோவில் திருவொற்றியூரில் உள்ள அருள்மிகு வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமிகள் எனப்படும் ஆதிபுரீஸ்வரர் அல்லது படம்பக்க நாதர் சிவன் கோயில். இரண்டாவது கோயில் திருவிடைமருதூரில் உள்ள சிவன் கோயில்.
|
|