|
படைப்புகளை வெளியிட |
அன்புடையீர்! எமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். நிபந்தனைகள்: 1. படைப்பாளிகள் எமது அகல்விளக்கு இணைய இதழில் (www.agalvilakku.com) உறுப்பினராக இணைய வேண்டும். படைப்பாளிகள் தங்களின் வசதிக்கேற்ப ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் உறுப்பினராக இணையலாம். படைப்புகள் வெளியிடும் தேதியில் அவர் உறுப்பினராக இருப்பது அவசியம். (உறுப்பினராக சேர இங்கே சொடுக்கவும்.) 2. உறுப்பினராக சேர்ந்துவிட்டதனாலேயே படைப்பாளியின் எல்லா படைப்புகளும் கட்டாயம் வெளியிடப்படும் என்ற உத்திரவாதம் அளிக்க இயலாது. படைப்பு தரமானதாக இருந்து, ஆசிரியர் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே வெளியிட முடியும். வழிமுறைகள்: படைப்புகள் எந்த கருப்பொருளிலும், எந்தத் தலைபிலும் இருக்கலாம். ஆனால் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். ஏற்கெனவே வெளியான தலைப்புகளைத் தவிர்க்கவும். இருப்பினும் அதே கருப்பொருள், தலைப்பினைத் தேர்ந்தெடுத்தால், புதிய உண்மைகள், புதிய கருத்துக்களுடன், புதிய கோணத்தில் படைப்பு அமையுமாறு பார்த்துக் கொள்ளவும். படைப்புகள் படைப்பாளரின் சொந்த ஆக்கமாகவும், புதிய ஆக்கமாக இருக்க வேண்டும். வேறு எங்கும் வாசிக்கப்பட்டது, வேறு இதழ்களில் வெளிவந்ததாக இருக்கக் கூடாது. அப்படி வேறு இதழில் வெளியிடப்பட்டிருந்தால், அதனை முதலிலேயே குறிப்பிட வேண்டும். அகல்விளக்கு ஆசிரியர் குழு விரும்பினால், அவற்றை மறுபகிர்வு என்ற பிரிவில் வெளியிட பரிசீலிக்கும். அகல்விளக்கு இணைய இதழில் வெளியாகும் அனைத்துப் படைப்புகளுக்கும் அதன் படைப்பாளர்களே முழுப் பொறுப்பு என்பதுடன் படைப்புகள் யாருடைய மனதும் புண்படாதவாறு இருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து படைப்புகளை அனுப்ப வேண்டும். அகல்விளக்கு இணைய இதழுக்கு அனுப்பப்படும் படைப்புகளைப் பிற இணைய இதழுக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். அங்ஙனம் எமது இதழில் வெளியான படைப்பு எமது அனுமதியின்றி பிற இணைய இதழ்களிளோ அல்லது பிற ஊடகத்திலோ வெளியிடப்படும் நிலையில் அப்படைப்பாளரின் படைப்புகள் எதுவும் அடுத்து வெளியிடப்படாமல் நிறுத்தப்படும். படைப்புகள் சந்திப் பிழை உள்ளிட்ட இலக்கணப் பிழைகள், தட்டுப் பிழைகள் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். படைப்புகளுக்குத் தேவையான படங்கள், அட்டவணைகள் உள்ளிட்டவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். படைப்புகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கலாம். படைப்புகளை வேர்டு கோப்பு (MS Word File) அல்லது குறிப்பேடு குறிப்புப் பலகையில் (Note Pad) தமிழ் ஒருங்குறி எழுத்துரு (Tamil Unicode Font) கொண்டு தட்டச்சு செய்து அனுப்பிட வேண்டும். பிற எழுத்துருக்கள் கொண்டு தட்டச்சு செய்யப்பட்ட கோப்புகள், பட வடிவக் கோப்புகள் (Picture Image), பிடிஎப் கோப்புகள் (PDF File) போன்ற வடிவங்களில் வெளியிடுவதை தவிர்க்கவும். படைப்பாளி தன் படத்துடன், தனது சுய விவரக் குறிப்பையும், முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் அனுப்பி வைக்கவும். படம் jpg, gif, png, போன்ற ஏதாவது ஒன்றாக இருக்கவேண்டும். ஆய்வுக் கட்டுரைகள்: கட்டுரைகள் மொழி, கலை, இலக்கியம், வரலாறு, பண்பாடு, மானுடவியல், சமூகவியல் போன்ற களங்களில் ஆராய்ந்து எழுதப்பட்ட நல்ல கட்டுரைகளாக இருக்க வேண்டும். கட்டுரைகள் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள், தொடரமைப்புப் பிழைகள், தட்டச்சுப் பிழைகள், தகவல் பிழைகள் இன்றி அமைய வேண்டும். ஆய்வு முறையியலைச் சரியாகப் பின்பற்றி எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆய்வுச் சிக்கல், கருதுகோள், ஆய்வு அணுகுமுறை, ஆய்வு நடை போன்ற கூறுகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆதாரங்கள் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும். அடிக்குறிப்புகள், துணை நூற்பட்டியல் போன்றவை கண்டிப்பாக இடம் பெற வேண்டும். வேறு அச்சு இதழ்களிலோ, ஆய்வுக் கோவைகளிலோ, தொகுப்பு நூல்களிலோ, இணைய இதழ்களிலோ வெளியிடப்பட்டிருக்கக் கூடாது. கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்டிருக்கக் கூடாது. அவ்வாறு வாசிக்கப்பட்டிருந்தால் அதற்கான குறிப்பு தரப்பட்டிருக்க வேண்டும். ஏற்கனவே நிகழ்த்தப்பட்டுச் சொல்லப்பட்ட கருத்துக்களாக இல்லாமல், புதிய ஆய்வுப் பொருண்மைகள், முடிவுகளுடன் கூடிய ஆய்வுகளுக்கு முதன்மை அளிக்கப்படும். எச்சரிக்கை: அகல்விளக்கு இணைய இதழில் படைப்புகள் வெளியிடுவதற்கு எமது அகல்விளக்கு இணையதளத்தில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே போதுமானது. படைப்புகளை வெளியிடுவதற்கென தனியாகப் பணம் எதுவும் பெறப்படுவதில்லை, இது போல் இடம் பெறும் படைப்புகளுக்கும் எந்தப் பணமும் வழங்கப்படுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். அகல்விளக்கு இணைய இதழில் வெளியிடப்படும் படைப்புகள் அனைத்தும் அதன் படைப்பாளர்களுக்கு முழு உரிமையானது. அகல்விளக்கு இணைய இதழுக்கு அனுப்பப்படும் படைப்புகளை வெளியிடவோ அல்லது நிராகரிக்கவோ ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு. மேலும் படைப்புகளைப் படைப்பாளரின் கருத்துக்கள் மாறாதபடி அகல்விளக்கு இணைய இதழுக்கு ஏற்றவாறு சுருக்கவோ, திருத்தம் செய்யவோ ஆசிரியருக்கு முழு உரிமையுண்டு. அகல்விளக்கு ஆசிரியர் அனுமதியின்றி படைப்புகளை வெளியிடுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் சேலம் மாவட்ட அளவிலான நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் எல்லைகளுக்குட்பட்டது. படைப்புகளை அனுப்ப: உங்கள் படைப்புக்கள் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@agalvilakku.com அன்புடன் கோ.சந்திரசேகரன் |
|