http://www.agalvilakku.com
இணைய இதழ்
மாதம் இரு முறை

படைப்புகள் அனுப்ப

அன்புடையீர்!

     அகல் விளக்கு இணைய இதழுக்கு உலகின் எப்பகுதியில் இருப்பவரும் தமது படைப்புகளை அனுப்பலாம். அகல் விளக்கு இணைய இதழில் வெளியாகும் அனைத்துப் படைப்புகளுக்கும் அதன் படைப்பாளர்களே முழுப் பொறுப்பு. படைப்புகள் அனைத்தும் யாருடைய மனத்தையும் புண்படுத்தாதவாறு இருக்க வேண்டும்.

     படைப்புகளை அஞ்சல் மூலமாகவோ மின்னஞ்சல் மூலமோ அனுப்பலாம். மின்னஞ்சலில் அனுப்பினால், தாங்கள் பயன்படுத்திய தமிழ் எழுத்துரு (Tamil Font) பற்றி குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். படைப்புகள் தமிழ் ஒருங்குறி எழுத்துருவில் (Tamil Unicode Font) அமைந்திருந்தால் மிகவும் நன்று. தேவையான ப்டங்களை (தாங்கள் எடுத்த புகைப்படங்கள் மட்டும்) அஞ்சல் மூலம் அனுப்பவும். மின்னஞ்சல் மூலம் படங்களை அனுப்ப வேண்டாம். அவைகள் ஏற்றுக் கொள்ள இயலாது.

     அகல் விளக்கு இதழுக்கு அனுப்பும் படைப்புகள் பிற அச்சு ஊடகத்திலோ, ஒலி ஊடகத்திலோ, ஒளி உடகத்திலோ, இணைய உடகங்களிலோ வெளியிடப்படாததாக இருக்க வேண்டும். அகல் விளக்கு இணைய இதழில் வெளியான படைப்பு பிற ஊடகத்தில் வெளியிடப்பட்டது தெரிய வந்தால் அப்படைப்பாளரின் படைப்புகள் எதுவும் அடுத்து வெளியிடப்படாமல் நிறுத்தப்படும். மேலும் இது குறித்து தக்க சட்டப்பூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

     அகல் விளக்கு இணைய இதழ் மாதமிருமுறையாக, ஆங்கிலத்தேதி 10 மற்றும் 25 ஆம் தேதிகளில் புதுப்பிக்கப்படுவதால் புத்துப்பித்தலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக, அதாவது 5 மற்றும் 20ஆம் தேதிக்குள் கிடைக்கும் படைப்புகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். தாமதமாகக் கிடைக்கும் படைப்புகள் அனைத்தும் அடுத்து வரும் புதுப்பித்தலுக்கே பரிசீலிக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் அனைத்தும் அகல் விளக்கு இணைய இதழில் அடுத்து வரும் புதுப்பித்தலில் இடம் பெறும். தேர்வு செய்யப்படாத படைப்புக்கள் குறித்த தகவல் மின்னஞ்சல் மூலம் இயன்றவரை படைப்பாளிகளுக்கு அறிவிக்கப்படும். படைப்பாளிகளும் தங்கள் படைப்புக்களின் நிலை குறித்து அவ்வப்போது மின்னஞ்சல் மூலமோ, கைப்பேசி மூலமோ எம்மைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

     அகல் விளக்கு இணைய இதழில் வெளியிடப்படும் படைப்புகள் அனைத்தும் அகல் விளக்கு இணைய இதழ் நிர்வாகத்திற்கு முழு உரிமையானது. அதற்கு ஈடாக அகல் விளக்கு இணைய இதழில் வெளியாகும் அனைத்து படைப்புகளுக்கும் தக்க சன்மானம்/பரிசுத் தொகை வழங்கப்படும். சன்மானம்/பரிசுத் தொகை நிர்ணயிப்பதில் ஆசிரியரின் முடிவே இறுதியானது.

     அகல் விளக்கு இணைய இதழுக்கு அனுப்பப்படும் படைப்புகளை வெளியிடவோ அல்லது நிராகரிக்கவோ ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு. மேலும் படைப்புகளை இயன்றவரை படைப்பாளரின் கருத்துக்கள் மாறாதபடி அகல் விளக்கு இணைய இதழுக்கு ஏற்றவாறு சுருக்கவோ, திருத்தம் செய்யவோ ஆசிரியருக்கு முழு உரிமையுண்டு.

     அகல் விளக்கு இணைய இதழில் வெளியாகும் படைப்புகளை அகல் விளக்கு ஆசிரியர் அனுமதியின்றி வெளியிடுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் சென்னை பெருநகர நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற எல்லைகளுக்குட்பட்டது.

படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:

கோ.சந்திரசேகரன்,
அகல் விளக்கு இணைய இதழ்,
எண் 2, சத்தியவதி நகர் முதல் தெரு,
பாடி, சென்னை - 600 050.
தொலைபேசி: +91-91768-88688
மின்னஞ்சல் : admin@agalvilakku.com
தங்கள் அன்பன்
கோ.சந்திரசேகரன்