4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 1, 2019, 12:30 [IST]

புதுதில்லி: தெலுங்கானா, ஹிமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கேரள ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹிமாச்சல் பிரதேசத்தின் ஆளுநராக பண்டாரு தத்தாட்ரேயா நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரத்தின் ஆளுநராக பகத் சிங் கோஷ்யாரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஹிமாச்சல் பிரதேசத்தின் ஆளுநராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தான் மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.

இன்று குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கடந்த 2014-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து அவரது பதவிக்காலம் முடிந்த நிலையில் அவரே மீண்டும் அப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் முடிவடைகிறது. தற்போது அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் பாஜக தலைவர் பதவியிலிருந்து விடுவிக்கப்படுவார்.

மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்றுள்ளார் தமிழிசை. இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி ஆனந்தனின் மகள் ஆவார்.

நடைபெற்ற மக்களவைத் தேர்தல் 2019-ல் தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை, தேர்தலில் தோல்வியுற்றார்.

கவர்னராக நியமிக்கப்பட்டது தொடர்பாக தமிழிசை அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: கவர்னர் நியமனம் மகிழ்ச்சி அளிக்கிறது. கடுமையான உழைப்பிற்கு பா.ஜ., அங்கீகாரம் தரும் என்பதை பிரதமர் மோடியும், பா.ஜ., தலைவர் அமித்ஷாவும் நிரூபித்துள்ளனர். எனக்கு ஆதரவு அளித்த தமிழக அரசியல் தலைவர்கள், குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவித்து கொள்கிறேன். பா.ஜ., தலைவராக இருந்த எனக்கு அதை விட மிகப்பெரிய பதவியை கட்சி தலைமை கொடுத்துள்ளது. தமிழக பா.ஜ., தலைவராக எனது பதவிக்காலம், டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பிற செய்திகள்






எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888



இந்திய தேசியப் பூங்காக்கள்
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

சீனாவில் இன்ப உலா
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

இசையில் நடனத்தில் ரஸம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)