ஆந்திராவின் ஆளுநரா? சுஷ்மா சுவராஜ் மறுப்பு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 11, 2019, 05:00 [IST]

புதுதில்லி: ஆந்திர மாநில புதிய ஆளுநராக முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டதாக வெளியான தகவலை சுஷ்மா சுவராஜ் மறுத்துள்ளார்.

நரேந்திர மோடி தலைமையிலான கடந்த ஆட்சியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிடவில்லை. தனது உடல்நலம் கருதி சுஷ்மா ஸ்வராஜ் மீண்டும் தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு நரசிம்மன் ஆளுநராக இருந்து வந்தார். அவருக்கு பதிலாக ஆந்திராவிற்கு சுஷ்மா சுவராஜ் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது.

இந்தநிலையில், இதுகுறித்து சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில், “ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஆளுநராக நான் நியமிக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்தி தவறானது” என்று பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்






எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888



புதிய பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

விடுகதைகள்
இருப்பு உள்ளது
ரூ.10.00
Buy

சிந்தனை முழக்கங்கள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

பூவும் பிஞ்சும்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)