அகல்விளக்கு.காம் உறுப்பினராக | ||||||
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக |
அரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 06, 2018, 16:15 [IST] திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் மாணவர்களில் ஒருவர் நெல் ஜெயராமன். இவர், 169 பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட பெருமைக்கு உரியவர். சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்த அவர் பின்னர் நெல் வகைகளைக் காப்பாற்ற களம் இறங்கினார். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல்வகைகளை பிரபலப்படுத்தியிருந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனை பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.10 மணிக்கு நெல் ஜெயராமன் உயிரிழந்தார். அவருக்கு சித்ரா என்ற மனைவியும் 11 வயதில் மகனும் உள்ளனர். அவரது உடல் தேனாம்பேட்டை ரத்னா நகர் 2-ஆவது தெருவில் பொது மக்கள் அஞ்சலிக்காக காலை 8 மணி முதல் 11 மணி வரை வைக்கப்படுகிறது. பின்னர் அவரது சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டு நாளை மதியம் 12 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இந்த தகவலை தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். |
|
அன்புடையீர்! எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com |
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs.3000/- பேசி: 9444086888 |
|
|