கஜா புயல்: 5 மாவட்ட பள்ளி - கல்லூரிக்கு விடுமுறை

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : நவம்பர் 14, 2018, 14:20 [IST]

சென்னை: கஜா புயல் காரணமாக 5 மாவட்ட பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை (15-11-2018) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர்- பாம்பன் இடையே நாளை (வியாழக்கிழமை) பிற்பகல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து புயல் அபாயம் உள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன.

மழையால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்கவும், பள்ளி, கல்லூரி வளாகங்களை தாழ்வான இடங்களில் வசிப்போரை கொண்டு வந்து தங்க வைக்க உதவியாகவும், இதுவரை மொத்தம் 5 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடலூர், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தனியார் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கஜா புயல் கரையை கடப்பதில் புதிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. நாளை மாலைதான் புயல் கரையை கடக்கும் என்றும் நாளை மதியம் கரையை கடக்காது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயலின் வேகம் குறைந்த காரணத்தால் நேரத்தில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. புயல் இன்று காலை வரை 10-20 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது. ஆனால் இன்று காலையில் திடீர் என்று வேகம் குறைந்தது. தற்போது 6கிமீ வேகத்தில்தான் இந்த புயல் செல்கிறது.

பிற செய்திகள்






எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888



விடுகதைகள்
இருப்பு உள்ளது
ரூ.10.00
Buy

ஞானவியல்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

பசியின் நிறம் வெள்ளை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

பொது அறிவுத் துளிகள்
இருப்பு உள்ளது
ரூ.35.00
Buy

நேசிக்கிறேன்...
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)