பல்சுவை இணைய இதழ்
  
அகல்விளக்கு.காம் உறுப்பினராக
1 வருடம்
ரூ.118 (ரூ.100+18 GST)
3 வருடம்
ரூ.236 (ரூ.200+36 GST)
5 வருடம்
ரூ.354 (ரூ.300+54 GST)
பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்குக


அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 27, 2018, 16:30 [IST]

புதுதில்லி: அயோத்தி தொடர்புடைய வழக்கில் மசூதி என்பது இஸ்லாம் மதத்தின் ஒருங்கிணைந்த ஒன்று அல்ல என்ற முந்தைய தீர்ப்பு குறித்து மேல் விசாரணை நடத்த 5 நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்ப உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதி யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அயோத்தி நில உடைமை தொடர்பான வழக்கு கடந்த 1950-ம் ஆண்டில் கோபால் சிங் என்பவரால் தொடரப்பட்டது. அதே போன்று இஸ்லாமிய அமைப்பு சார்பில் சித்திக் என்பவரும் மனு தாக்கல் செய்தார். மனுதாரர்கள் இருவருமே இறந்துவிட்ட நிலையிலும் இந்த வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன.

அயோத்தியின் நில உரிமை தொடர்பான வழக்கை விசாரித்த அலகபாத் உயர் நீதிமன்றம், அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை, சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகியவை சம பாகங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி இஸ்மாயில் பாரூக்கி, கடந்த 1994-ம் தொழுகை நடத்துவதற்கு மசூதிகள் அவசியமான ஒன்று அல்ல என தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரி முஸ்லிம்கள் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

இதில் தீபக் மிஸ்ரா மற்றும் அசோக் பூஷண் தனியாக தீர்ப்பை வாசித்தனர். மற்றொரு நீதிபதியான நஸீர் தீர்பபை தனியாக வாசித்தார்.

தீபக் மிஸ்ரா மற்றும் அசோக் பூஷண் வழங்கிய தீர்ப்பில், “சொத்து உரிமை தொடர்பான வழக்கில் சான்றுகள் மற்றும் முந்தைய தீர்ப்பின் அடிப்படையிலேயே பரிசீலனை செய்ய முடியும். அதற்கு மாறாக பொருத்தத்தின் அடிப்படையில் முடிவெடுக்க முடியாது. எனவே இதனை 5 நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்ப வேண்டிய தேவையில்லை. அனைத்து மசூதி, தேவாலயங்கள், கோயில்கள் சமூகத்திற்கு முக்கியமானது” எனக் கூறினர்.

நஸீர் வழங்கிய தீர்ப்பில், “மசூதி என்பது இஸ்லாம் சமயத்தின் ஒருங்கிணைந்த ஒன்றா என்பது குறித்து விரிவான ஆலோசனைகளும், விசாரணைகளும் தேவைப்படுகின்றன” எனக் கூறினார்.

இதன் மூலம் அயோத்தி சர்ச்சை தொடர்பான மூல வழக்கு அக்டோபர் 29-ம் தேதி நடைபெறுகிறது.

பிற செய்திகள்
ஆந்திராவின் ஆளுநரா? சுஷ்மா சுவராஜ் மறுப்பு
ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம்
மதுரை தொகுதியில் நீதிபதி முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை [வீடியோ]
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை திடீர் நிறுத்தம் [வீடியோ]
ஹோர்முஸ் ஜலசந்தியை மூடப் போவதாக ஈரான் எச்சரிக்கை [வீடியோ]
தமிழகம்: 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : திருப்பூர் மாவட்டம் முதலிடம் [வீடியோ]
மதுரை தேர்தல் அதிகாரி நடராஜனை மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு
தமிழகம், புதுவை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
வியட்நாமில் டிரம்ப் - கிம் சந்திப்பு தோல்வி
திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
அஇஅதிமுக - பாஜக தொகுதி உடன்பாடு - 5 தொகுதிகள் ஒதுக்கீடு
அஇஅதிமுக - பாமக தொகுதி உடன்பாடு : 7 லோக்சபா, 1 ராஜ்யசபா இடம்
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வாபஸ்
திருவாரூர் தேர்தல் ரத்து: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மைசூரு: விஷம் கலந்த பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பலி
விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா
அரிய நெல் விதைகளை சேகரித்த நெல் ஜெயராமன் காலமானார்
புயல் பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பயணம் திடீர் ரத்து
புதிய புயல் சின்னம்: வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு
கஜா புயல்: 5 மாவட்ட பள்ளி - கல்லூரிக்கு விடுமுறை
இலங்கை: ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி
முதல்வர் மீதான டெண்டர் வழக்கு சி.பி.ஐ. விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888

உலக சினிமா - ஓர் பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இக பர இந்து மத சிந்தனை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

சுவையான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

எந்த மொழி காதல் மொழி
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

சீனாவில் இன்ப உலா
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)