பல்சுவை இணைய இதழ்
  


தகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 27, 2018, 15:45 [IST]

புதுதில்லி: வேறொருவர் மனைவியுடன் அவரது ஒப்புதலுடன் உடலுறவு கொள்ளும் தகாத உறவு சட்டப்படி குற்றமில்லை, எனவே தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுகிறது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

வேறொரு நபரின் மனைவி என்று தெரிந்திருந்தும், அந்த நபரின் சம்மதத்துடனோ, சம்மதம் இல்லாமலோ அப்பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது குற்றம் என இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவு குற்றம் என சொல்கிறது. இந்த குற்றத்துக்கு 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

இந்திய தண்டனை சட்டத்தின் 497 வது பிரிவு, ஆணை மட்டும் தண்டிக்கும் வகையில் உள்ளது. இது ஆண் - பெண் சம உரிமைக்கு எதிரானது என்ற வழக்கை, தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:

“தகாத உறவு என்பது சட்டவிரோதம் அல்ல. இந்த சட்டத்தின்படி தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிப்பது என்பது ஏற்கத்தக்கதல்ல. இந்த தகாத உறவு யாரையும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் இதை குற்றமாக கருத முடியாது. மனைவி என்பவர் கணவனின் சொத்து அல்ல. ஒருவரது உடன்பாட்டுடன் நடக்கும் உடலறவை, பாலியல் பலாத்காரமாக கருத முடியாது. இருவருர் விரும்பி உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் பாலத்காரமாக கருதுவதை ஏற்க முடியாது. எனவே தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் அரசியல் சட்டத்தின் 497வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது” என நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.

பிற செய்திகள்






எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888



மகளிருக்கான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

தூரன் கட்டுரைகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

சுந்தரமூர்த்தி நாயனார்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

சுவையான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

நாகம்மாள்
இருப்பு உள்ளது
ரூ.55.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)