ஓரினச்சேர்க்கை குற்றமல்ல : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 6, 2018, 14:10 [IST]

புதுதில்லி: ஓரினச் சேர்க்கை குற்றம் அல்ல என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டப்பிரிவு 377 ஐ ரத்து செய்வதாகவும் உச்சநீதிமன்றம் அமர்வு தெரிவித்துள்ளது.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் என்று, அதற்கு, 10 ஆண்டுகள் வரை சிறை, அபராதம் விதிக்கும் வகையில், 1861ல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, இந்திய குற்றவியல் சட்டத்தின், 377வது பிரிவின் கீழ், இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமாகும்.

இந்தச் சட்டப் பிரிவை எதிர்த்து, 'நாஸ்' அறக்கட்டளை என்ற அமைப்பு, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. டில்லி உயர் நீதிமன்றம், 'இந்தச் சட்டப் பிரிவு சட்டவிரோதமானது' என, 2009ல் தீர்ப்பு அளித்தது. டில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு, 2013ல், உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இதை எதிர்த்து தன்பாலின உறவு ஆதரவாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணை நடைபெற்று வந்தது. முக்கியத்துவும் வாய்ந்த இந்த வழக்கு பின்னர் ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, விரிவான விசாரணை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்றது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் “நாட்டில் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை அரசியல் சட்டம் உறுதி செய்கிறது. கால மாற்றத்துக்கு ஏற்ப சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் தற்போதும் ஏற்புடையதாக இருக்காது. எனவே அரசியல் சட்டத்தின் 377வது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும். தன்பாலின உறவு என்பது சட்டவிரோதமானது அல்ல” என கூறினர்.

பிற செய்திகள்






எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888



தொட்டிக் கட்டு வீடு
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy

ஊசியும் நூலும்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

தங்கச் சங்கிலி
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இந்திய தேசியப் பூங்காக்கள்
இருப்பு உள்ளது
ரூ.80.00
Buy

மண்மேடு
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

செம்புலச் சுவடுகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)