ஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 24, 2018, 23:10 [IST] தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 100 நாட்களாக மக்கள் போராடி வந்தனர். 100 வது நாள் போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை தலைவர் ஆகியோர் மாற்றப்பட்டனர். புதிய ஆட்சியராக பதவி ஏற்ற சந்தீப் நந்தூரி தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இன்று மாலை ஆட்சியர் அலுவலகத்தில் அமைதிக் குழு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார். ஆலையை மூடவே மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். துப்பாக்கி சூட்டில் இதுவரை 13 பேர் பலியாகி உள்ளதாகவும், 19 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 83 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். 29 ஆண் காவலர்களும், 10 பெண் காவலர்களும் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். 110 வாகங்கள் சேதப்பட்டுத்தப்பட்டுள்ளன என்றும் அவற்றின் மதிப்பு சுமார் 1.27 கோடி எனவும் ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 29 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பும் விதமாக நாளை ரேசன் கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நகரப் பேருந்துகள் இயக்குவது குறித்து நாளை முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
|
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888 |
|
|