பல்சுவை இணைய இதழ்
  


வாக்கெடுப்புக்கு முன் ராஜினாமா செய்தார் எடியூரப்பா

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 19, 2018, 16:50 [IST]

பெங்களூரூ: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இன்று கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, மாலை 4 மணிக்கு நடைபெற இருந்தது. அதற்கு முன்பாக முதல்வர் எடியூரப்பா பேசினார்.

அப்போது எடியூரப்பா “கர்நாடக மக்கள் பாஜகவுக்கு 104 இடங்களை அளித்தார்கள். அவர்கள் ஆதரவு காங்கிரஸுக்கோ மதசார்பற்ற ஜனதா தளத்துக்கோ இல்லை. மக்கள் எங்களுக்கு 113 இடங்களை அளித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கர்நாடகாவில் உள்ள 28 இடங்களையும் கைப்பற்றும். ஆட்சியை இழப்பதால் எதையும் இழந்து விடமாட்டேன். மக்களுக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன்” என்று பேசினார்.

பின்னர் எடியூரப்பா முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பின்னர் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் அளித்தார் எடியூரப்பா.

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு 12-ம் தேதி 222 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 15-ம் தேதி முடிவு அறிவிக்கப்பட்டதில், எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிட்டவில்லை. பா.ஜ.க. 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும், மற்றவர்கள் 2 இடங்களிலும் வென்றனர்.

பிற செய்திகள்






எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888
உங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா? - ஒரு முறை கட்டணம் : Rs. 1000/- பேசி: 9444086888



பொது அறிவுத் துளிகள்
இருப்பு உள்ளது
ரூ.35.00
Buy

சுவையான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

உலக சினிமா - ஓர் பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

நேசிக்கிறேன்...
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

சீனாவில் இன்ப உலா
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

அற்புத மகான்கள்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

சுவையான 100 இணைய தளங்கள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
நீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)